வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Wednesday, November 30, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-1(மாடு,கிளி,பெட்டி )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் - மாடு, பெட்டி, கிளி


மாடு போல் உழைத்து
செல்வத்தை தன்
இரும்புப் பெட்டியிலும்
அன்பினை தன்
இதயப் பெட்டியிலும்
வைத்துப் பாதுகாத்தார்
தந்தை - தான்
கிளியென வளர்த்த
தன் மகளுக்காக!!!

http://www.eegarai.net/t75698-topic#684164 

கடற்கரையில் ஒரு கோடை மாலை


யாரப்பா அங்கே.....
சூரிய தேவனவன்
ஓய்வெடுக்கச் செல்கிறான்....
வழியனுப்ப வாருங்களேன்...
நாள் முழுதும் அயராது
தன் ஒளிக் கதிர்களால்
சுட்டெரிக்கும் பணியைச்
செவ்வனே செய்து முடித்து
அயர்ந்து போய் -
தன் சூட்டையெல்லாம்
ஆழியினுள் அழுத்தி
ஆழி நீரையும்
அகன்ற வானமதையும்
செம்மையாக்கி விட்டு
நித்திரைக்குள் மூழ்குகிறான்
சூரிய தேவனவன்.........
வாருங்கள் - வரவேற்கத்
தயாராவோம்.....தன்மையை
தன்னகத்தே கொண்ட
சந்திர  தேவனை !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=73

தண்ணீர்.


காற்றது இட்டுச் செல்ல
மேகப் பெண்ணவள்
காற்றின் இசைக்கேற்ப
நடனமாடுகிறாளோ???
அந்த நாட்டிய அரங்கத்தில்
நீர்த் தோழியும்
மேக மங்கைக்கு துணையாய்
கைகோர்க்கிறாள்!!!
அற்புத நாட்டியத்தைக்
கண்டு கழிக்க அங்கே
வந்து விட்டான்-
வருண தேவனும்!!!
அண்ணலது வரவால்
குளிர்ந்தது - நானிலமெங்கும்!!!
நிறைந்தது - வாழ்வும் வளமும்!!!

Sunday, November 27, 2011

மலையளவு நம்பிக்கை

உலகின் உயரமான மலையிலிருந்து
வந்தேன்-உலகின் குள்ளமான மனிதன்
எங்கள் நேபாளத்தின் அரசுத் தூதுவனாய்.....
உயரம் குறைவாய் இருப்பதாய்
என்றும் நெஞ்சில் குறையிருந்ததில்லை....
உள்ளத்தில் இருக்கிறது நம்பிக்கை-
எங்கள் தேசத்தின் உயரமான மலையளவு!!!

http://www.eegarai.net/t72755p180-topic#682103

குதிகால் செருப்பழகி


அடி குதிகால் செருப்பழகியே....
உன் வீட்டில் என்ன
தஞ்சம் தாண்டவமாடுகிறதோ?
அரை ஜான் உயரமான
நான் கூட -  உச்சி முதல்
பாதம் வரை
ஆடை அணிந்திருக்க....
ஆறடி உயரமான உனக்கு
உன் முழங்கால் மறைக்க
ஆடை கிடைக்கவில்லையோ??

http://www.eegarai.net/t72755p180-topic#682101


Sunday, November 20, 2011

விதையிலிருந்து......


விதையாய் பூமிதனில்
விழுந்து-மண்ணை தன்
வேர்களால் இறுகப் பற்றி
நிமிர்ந்து நின்று.....
ஆதவனின் ஒளி கண்டு
முகம் மலர்ந்து.....
காற்றின் இசைக்கேற்ப
தலையசைத்து .......
பருவத்தே பயனளித்து
தன் கடனாற்றும்
உன்னதப் பிறவிகள் - தாவரங்கள்!!!
http://pullaankulal.blogspot.com/2011/11/5.html#comment-form

மழைத் தாய்க்கு ஓர் நாட்டியாஞ்சலி வரவேற்பு!!!


மழைக்கு கறுப்புக்
குடைதனை
கொடியாகக்  காட்டி
புறக்கணிப்போர் மத்தியிலே
இங்கே நடக்கிறது-
மழைத்  தாய்க்கு ....
நாட்டியாஞ்சலி வரவேற்பு!!!
மனம் குளிர்ந்த அன்னையவள்
வந்து விட்டாள்......
தன் பூமிக் கிள்ளையைத் தேடி!!!
மகிழ்ந்திருப்போம்-
அன்னையின் தன்மையில் ........
என்றும் மறவாதிருப்போம்-
மழை தரும் மரங்களை
வளர்க்க வேண்டுமென்பதை !!!
http://pullaankulal.blogspot.com/2011/11/6.html#comment-form


Wednesday, November 16, 2011

உறுதியாய் இரு...


உலகம் - இது ஓர்
சதுரங்கக் கட்டம்!!!
நம்மைச் சுற்றி
எத்தனை எத்தனையோ
இராஜாக்கள்....இராணிகள்....
மந்திரிகள்....யானைகள்......
குதிரைகள்.....சிப்பாய்கள்....
பல்வேறு வடிவங்களில்....
பல்வேறு நிறங்களில் ...
ஓர் பெரும் இராஜாங்கமே நடக்கிறது....

சதுரங்கக் கட்டத்திலோ 
இரு வேறு நிறங்கள் மட்டுமே!!!
ஆனால் உலகச் சதுரங்கதிலோ....
எத்தனை எத்தனையோ நிறங்கள்....
இராஜாங்கத்தில் -

எண்ணங்களால் உயர்ந்தோரும் உண்டு....
தம் செயல்களால் தம்மை
தாழ்த்திக் கொண்டோரும் உண்டு.....
பார்த்து பொறுமையாய் -
நிதானமாய் அடியெடுத்து வைப்போம்......
எண்ணத்தில் மேன்மை கொண்டு -
உள்ளத்தில் உண்மை கொண்டு
பெருமையாய் நிமிர்ந்து நிற்போம்.....
நம் கண்ணியமான உழைப்பின் துணை கொண்டு!!!


http://www.vaarppu.com/padam_varikal.php?id=68 

மின்னல்

மேகத் திரை விலக்கி
வனிதையவள் வானத்து
வீதிகளின் அழகினை
ரசிக்கிறாளோ??
அவளது பார்வையின் ஒளி
மின்னலென பளிச்சிடுகிறதோ???
அன்றி - அவளது குமுதவாய் மலர்ந்து
புன்னகை பூக்கிறாளோ??
வெண்பற்கள் முத்துக்கள் என மின்னி
மின்னலாய் கண்ணைப் பறிக்கின்றனவோ!!!
http://eluthu.com/kavithai/46174.html 

Tuesday, November 15, 2011

சமாதானம்


ஹிம்சையால் ஆகாததை
அஹிம்சை கொண்டு
சாதிக்கும் அற்புதம் -
சமாதானம்!!!
சமாதானம் - இது
உடைந்த உள்ளங்களை
ஒன்று சேர்க்கும் ...........
வெறுப்பு எரிமலைகளை
அன்புப் பனிமலைகளாக்கும்!!!
இதயக் கேணியில்
மனிதநேயம் ஊற்றெடுக்கும்!!!
நேயம் மலரச் செய்யுமே
வேற்றுமையில் ஒற்றுமை!
ஒற்றுமை வளர்க்குமே -
பலமான நல்லுறவு!
நல்லுறவில் மேலோங்கும்-
உள்ளத்து அமைதி!
அமைதியின் மடிதனில்
ஜனிக்கும் - அன்பு உலகம்!!!!
http://eluthu.com/kavithai/46175.html 

Saturday, November 12, 2011

பனித்துளி

இலை மகளுக்கு
இயற்கை அன்னை
சூடிப் பார்க்கும்
வைர ஆபரணம்-
பனித் துளி!!!
ஆதவனின் ஒளி பட்டு
ஜொலிக்கிறது!!!
http://eluthu.com/kavithai/35985.html 

Friday, November 11, 2011

மறப்போம்.... மன்னிப்போம்!!!



உமக்கு மூச்சுக் காற்றை யாம் தந்தோம்
எம்மை மரிக்கச் செய்து அடுப்பெரித்தீர்!!
மழை வர யாகம் என்று
எம்மையே நெருப்பிலிட்டீர்!!!
உமக்கு நிழல் தந்து நாங்கள் காய
எமக்குப் பரிசாய் எங்கள் உடலில் -
உமது பெயர்க் காயங்களை விட்டுச் சென்றீர்!
வாழும் போதும் உங்களை வாழ வைத்தோம்
வீழ்ந்த பின்னும் உமக்கு செல்வமளித்தோம்!
ஆயிரம் அநீதி எமக்கு நீரிழைத்த போதிலும்
எமது கொள்கை  என்னவோ -
"மறப்போம் மன்னிப்போம்".....
தொடர்கிறது எமது சேவைப் பணி!!!
இனியேனும் உணர்ந்து செயல் படுவீர்..
உள்ளத்து உறுதி கொள்வீர் -
உலக வெப்ப மயமாதலை தடுத்திட
என்றும் எம்மைக் காத்து
உலக நலம் பேணி
நலமாக வளமாக வாழ்ந்திட !!!
http://www.vaarppu.com/padam_varikal.php?id=77

Thursday, November 10, 2011

காலடிச் சுவடு


 கடற்கரை மணலில்
பதியும் காலடிச் சுவடு போன்றது-
மனித வாழ்வு.
அடுத்தடுத்து  வரும் அலைகள்
கரையை தழுவிச் செல்லும் போது
நிலை மாறுவது போல்
மனித வாழ்வும் நிலையற்றது......
வாழும் நாளில்
தன்னலம் பேணாது
பொதுநலம் மனதில் கொண்டு
பதித்திடுவோம் நமது சுவடை
உலக ஏட்டினிலே!!!


குழலோசை-2

கள்ளமில்லாச் சிரிப்பு


நீரும் இங்கு குதூகலிக்கிறதோ???
கொள்ளை கொள்ளும் உன் 
கள்ளமில்லாச்   சிரிப்பைக் கண்டு!!!

குழந்தையின் வார்த்தைகள்


உன் உயிருள் நான் உதித்தேன்.....            
உன்னுள் நான் வாழ்ந்தேன்.........
உன் அன்பின் ஸ்பரிசங்களில் 
பாதுகாப்பை உணர்கிறேன்.....
என்றும் உன் -
தூய உள்ளத்து அன்பை
உறுதுணையாய்க்  கொண்டு 
வலம் வருவேன் உலகினையே-
வெற்றித் திருமகனாய்!!!
குழலோசை-3
              

நோயற்ற வாழ்வுக்கு...



இயற்கையுடன் இயைந்த வாழ்வு 
அது தருமே நிறைவான மகிழ்வு 
நோயும் நொடியும் தான் அஞ்சுமே
எழில் கொஞ்சும் பல்வகை 
பழங்களை நாம் புசித்தால்..............
புசித்துப் புசித்து பசியை 
மறப்பதை விட - பசித்த 
வேளையில் புசிப்போம்!!!
இயற்கையில் எத்தனை 
வண்ணங்கள் -
அவையனைத்தும் பிரதிபலிக்கும் 
மலர்களும் கனிகளுமாய்......
அவை தருமே  
உடல் - உள்ளத்தை 
வலுவாக்கும் சத்துக்கள்!!
காத்திடுவோம் இயற்கையை 
வழிவகித்திடுவோம்-
நோயற்ற வாழ்வுக்கு!!!
  http://www.vaarppu.com/padam_varikal.php?id=74

Wednesday, November 2, 2011

பாசம்


ஆடி ஓடி விளையாடி
அசந்து போய் வருகையிலே
அலுப்பால் உடல் வாட‌
சோர்வது உடல் தழுவ‌
உறக்கம் கண் தழுவ‌
விளையாட்டுக்கு தோழனாம்
காவலுக்கு உற்றவனாம்
பைரவனவன்
பஞ்சணை ஆகிட‌
உலகம் மறந்து
கண் துயிலுகிறான்-
அழகுச் சிறுவனவன்......
http://www.eegarai.net/t72755p180-topic
http://www.higopi.com/ucedit/Tamil.html

புதுமைப் பெண்

ஆயிரம் சவால்களை
முன்னிறுத்தி
பொறுப்புகள் பல
அளித்து
மலையென துன்பங்கள்
எதிர் வந்த போதும்
கேள்விக் கணைகள்
பல தொடுத்து
சோர்வுற‌ச் செய்த போதும்
தன்னம்பிக்கை மிகக் கொண்டு
துணிவினை துணையாக்கி
வெற்றியை தனதாக்கி
நிமிர்ந்து நிற்கிறாள்
புதுமைப் பெண்!!!
http://www.eegarai.net/t72755p165-topic

இளமை மாறாக் காதல்


தனிமையிலே  நாமிருக்க 
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க‌ -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி  நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்-
என்றும் இளமை மாறாக் காதலுடன்!
http://www.eegarai.net/t72755p165-topic