வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Saturday, August 31, 2013

சுதந்திர இந்தியா









இலஞ்சத்தின் பிடியில்
அரசியல்வாதிகளின் -
இரும்புக் கரங்களுள்
சுதந்திர இந்தியா !
பாதுகாப்பும் தான் பறிபோய்
பல நாட்களும் ஆனதே !
அத்தியாவசியத் தேவைகளெல்லாம்
ஆகாச உயரத்திற்கு விலையேறிப் போனதே !
சுயநலமும் தான் அனைவர்
மனங்களையும் ஆட்கொண்டதே -
தேசத்தின் நினைப்பும் தான்
இல்லாமலேயே போனதே !
செல்வரெல்லாம் மென்மேலும்
கொழித்துக் கொண்டே போக
ஏழை எளியோரோ - நாளும்
துயரில் உழன்று கொண்டேயிருக்க
அடிப்படைக் கல்வி கூட நாளை
கனவான் வீட்டுக் கஜானாவினுள்
சிறையிருந்தாலும் - சற்றும்
ஆச்சயப்படுவதற்கில்லை!
கடமை உணர்ந்து தேசம் காத்திட்டால்
தேசம் நம் சொத்து ! - இல்லையேல்
தயாராய் இருக்க வேண்டும் -
இன்னுமோர் சுதந்திர வேள்விக்கு !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=87

Wednesday, August 28, 2013

கண்ணன் வந்தான் !!!






கண்ணன் வந்தான்
எங்கள் கண்ணன் வந்தான் !
களிப்பினை ஏந்தி
எங்கள் கண்ணன் வந்தான் !
கண்ணீர் துடைக்க
எங்கள் கண்ணன் வந்தான் !
காத்திருந்த  எம்மை களிப்பிலாழ்த்த
எங்கள் கண்ணன் வந்தான் !
கண்களால் சிரித்து கவலைகள் மறக்கடிக்க
எங்கள் கண்ணன் வந்தான் !
கட்டிக் கரும்பென சுட்டிக் குறும்போடு 
எங்கள் கண்ணன் வந்தான் !
காலமெலாம் எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த
எங்கள் கண்ணன் வந்தான் !

Sunday, August 25, 2013

தனிமை - இனிமை



ஆயிரமாயிரம் எண்ணங்கள்
எத்துனையோ  நினைவுகள்
அணி கட்டிக் கொண்டு
மனதினுள் நீயா நானா என்று
முண்டியடித்து வர முயன்றதில்
ஏகப்பட்ட தள்ளு முள்ளு !!
இவையனைத்தையும் சீர்படுத்தி
செம்மையாய் பிரித்தறிந்து
தீர்வறிவதற்குள் பாவம்
துவண்டுதான் போய்விட்டது  மூளை !
அதுவும் தான் தேடி அலைந்தது -
ஓய்வும் உறக்கமும் !
துன்பம் துயரமனைத்தையும்
தனிமைப் படுத்திவிட்டு
அமைதியின் கரங்களில்
நம்மை ஒப்புவித்தால்
தனிமையும் கூட இனிமையே !!!



Friday, August 23, 2013

தனிமை



 




யாரையோ எதிர்பார்த்து நானும் 
எனக்காக காத்துக் கிடக்கும் 
எவரோ ஒருவருக்கும்
துணையாகக் கிடைத்தது 
தனிமை மட்டுமே !!!
சில வேளைகளில் 
கனவுகள் கற்பனைகள் மட்டுமே 
உற்ற துணையாய் !!!

Tuesday, August 20, 2013

எங்கேயோ கேட்ட குரல் !!!



வளைந்து நெளிந்தாடி
பாடி வரும் தென்றல் வழி
ஓடி வரும் இசையென
தெவிட்டா அமுதூற்றென
தேமதுரக் குரல் !!

தனிமையையும் உணரவில்லை
தவிப்பதுவும் தோன்றவில்லை
நினைத்த நொடிதனில்
இசை வெள்ளமென
செவிதனில் பாயும் குரல் !!

உடைந்து போன இசைத்தட்டாய்
ஒலிநாடாவில் இருந்த போதும்
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என
மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
அதே குரல் !!

கற்பனையாய் ஆனாலும்
கனவதனில் தொலைத்தாலும்
கடல் தாண்டி மலை தாண்டி நின்றாலும்
நினைவுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கும்
எங்கேயோ கேட்ட குரலாய் !!