வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -விலங்கு , புறா , கொடி.விலங்கென மாறி
தன்னிலை மறந்து
தடுமாறும் நேரமதில்
உள்ளமதில் வன்மம் கூடி
வெறுப்புமது நெஞ்சில்
கொடியாய் படர
அறியாமை இருளும்
கண்களை மறைக்க
அன்பின் வடிவாய்
தியாகச் சின்னமாம்
வெண் புறாவாய்
சமாதானம் இணைக்குமே
உலகத்து உறவுகளை
அன்பு கொண்டு!!!
No comments:
Post a Comment