கரையில் நிற்கும் மரத்தின் பிம்பம் நதியின் முகத்தில்.... என் மனதிருக்கும் துன்ப அலைகள் எவர் அறிவரோ?? |
வெண்பனி தோழனை வரவேற்று கட்டித் தழுவ மரமும் தயாராய் நிற்கிறதோ?? |
மழையின் தண்மையில்
துள்ளியாடி களைப்பு
மேலிட்டதோ??
காளான் குடைக்கடியில்
ஓய்வாக ஒதுங்கியுள்ளதே-
தத்தித் தாவும் தவளை.
பஞ்சுக் குவியலென பிஞ்சுக் குழந்தையின் பாதம் - தந்தையின் கைதனில் புத்தம் புதியதோர் உலகம்!! |
விழி மீன்களுக்கு இங்கு தூண்டிலிட்டவரும் எவரோ?? மீன்களின் அழகதில் மயங்கி தூண்டிலே இங்கு வளைந்து நிற்கின்றனவே- புருவங்களாக!!! |
வெற்றி வானும் தொட்டு விடும் தூரம் தான்..... வாழ்க்கைப் பாதையில் முயற்சிப் பாதம் வைத்து நடந்தால்!! |
கண்ணாடிக் குடுவையும் சருகில் தன் அழகிய முகம் பார்த்து மகிழ்கிறது- ஆதவனின் ஒளியில்!!! |
மதுக் கிண்ணமும் மதுவின் மயக்கத்தால் மதி மயங்கி நிற்கிறதோ?? |
உள்ளத்து சோகங்கள் ஆர்ப்பரிப்புகளுக்கு ஓர் வடிகால் - அமைதியான இயற்கையதன் மடிதனில்!!! |
No comments:
Post a Comment