ஏர் கண்டிஷனும் ஃபேனும் தான்
உதவாமல் போய்விட
கைகொடுப்பது பனையும்
தென்னையும் தான் - விசிறிகளாய் !!!
கிரைண்டரும் மிக்சியும்
ஓரமாய் படுத்துறங்க -மீண்டும்
துள்ளியோடி வந்து வாசலை
அலங்கரிக்குது - அம்மியும் ஆட்டுரலும் !!!
குளிர்ந்த நீருக்காக ஃப்ரிட்ஜ் அருகே
காத்திருந்த காலம் மாறி
கண்ணுக்கு அழகாய் கைக்கடக்கமாய்
ஆரோக்கியத்துடன் - மண்பானைகள் !!!
டிவியில் லயித்து - உலகை மறந்திருந்தோர்
இப்போது சுற்றியிருப்போரின்
முகங்களில் சிரிப்பினைப்
பார்க்கவும் பழகியிருக்கிறார்கள் !!!!
கம்ப்யூட்டரால் கட்டுண்டிருந்த குழந்தைகளுக்கு
இப்போது மனப்பயிற்சியும் உடற்பயிற்சியும் ....
தாயமும் பரமபதமும் - கண்ணாமூச்சியும்
தொட்டு விளையாட்டும் கூட விளையாடுகிறார்கள் !!!
செயற்கையோடு செயற்கையாகவே
வாழப் பழகிவிட்ட நமக்கு- இயற்கையோடு
இயைந்த வாழ்வினை அதன் சிறப்பினை
நமக்கு கற்றுத் தருகிறது - மின்வெட்டு !!!
http://www.vallamai.com/literature/poems/30013/
http://www.vaarppu.com/view/2689/
http://tamilauthors.com/03/503.html
No comments:
Post a Comment