வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Friday, March 15, 2013

குழந்தைகள்





உலகில் உள்ள இன்பங்களனைத்தும்
தஞ்சமடைந்திடும் நம்
உள்ளங்கை தனிலே …….
சிறு கிள்ளையதன்
கள்ளமில்லா சிரிப்பதனைக் கண்டால்!!!
அதிசிறந்த வேணுகானமும்
குழலின் இன்னிசையும்
சாதாரண இசை தான்
கொஞ்சும் குழவியின்
மழலை மொழி முன்னால் !!!
சின்னஞ்சிறு பிள்ளைகள் எல்லாம்
இறைவனின் தூதுவர்கள் தாம் -
தாம் இருக்கும் இடங்களிலெல்லாம்
இன்பம் தனை எப்போதும்
நீக்கமற நிறைந்திருக்கச் செய்வதால் !!!

8 comments:

  1. அருமை... ரசித்தேன்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

    நேரம் கிடைத்தால்... என் தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
  2. நன்றி சகோதரரே....வலைச்சரத்தில் எனது தளம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள செய்தியை அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல.

    தங்களது தளம் குறித்து முன்னமே அறிவேன்.அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது வருவதுண்டு. இப்போது தங்கள் தளத்தில் இணைந்து கொண்டேன்.

    நன்றி...

    ReplyDelete
  3. அழகிய கவிதை நானும் வலைச்சரம் மூலம் அறிந்துள்ளேன் தங்களை நேரம் கிடைப்பின் என் தளத்தையும் பார்வையிடுங்கள் எழுத துடிக்கிறேன் என்ற கவிதை வரிகளும் அழகு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி. கண்டிப்பாக தங்கள் தளத்திற்கு வருகிறேன்.

      Delete
  4. அன்புச் சகோ!
    வானில் முகிலின் பக்கங்களை உலாவருகின்றது. காணுங்கள் என்று இன்று வலைச்சரத்தில் ஓர் அறிக்கை கிடைத்ததும் ஓ... இளையநிலா தவறவிட்டுவிடாமல் கண்டுவிடு என்று முகிலை கலைத்துப் பிடித்து அதிலே வந்து இறங்கியும்விட்டேன்.

    வந்து பார்த்ததும் அடடா கொள்ளை அழகென வியந்துபோனேன். அருமை.
    மிகச் சிறப்பாகக் கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. அருமை. வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  5. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி சகோதரி.தங்களது கருத்துக்கள் உற்சாகமூட்டுவதாய் உள்ளன.

    ReplyDelete
  6. குழலினிது யாழினிது மழலை சொல் கேளாதார்..என்பது உண்மைதானே! எத்தனை கோபங்கள் இருந்தாலும் மழலை சொல் கேட்கும் போது முகம் அடுத்த நிமிடமே புன்னகை சூடி கொள்ளும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோதரி...அவர்தம் கள்ளமில்லா சிரிப்பதனை உலகை மறந்து இரசித்த அனுபவங்கள் மிக உண்டு.தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றிகள் பல சகோதரி.

      Delete