வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Tuesday, April 23, 2013

இவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது ???




அன்றலர்ந்த புத்தம்புது மலர்கள்
அனலில் தகிக்கும் கொல்லனின்
உலையாய் மாறியிருந்தது- அந்தத்
தொழிற்சாலை !!! ஆம் !!
இங்கே புது மலர்கள்
அனல் வீசும் நெருப்புப்
பெட்டிகள் தயாரிக்கின்றன !!!

அதிகாலை தன் வயிற்றுப் பசிக்கு
வீட்டிலிருக்கும் பழையதை ஈந்துவிட்டு
துவக்கும் அன்றைய தினம்
தாள்கட்டுகள் குச்சிகள்
சில்லு அட்டைகள் பசை கிண்ணங்கள்
அச்சுக் கட்டைகள் என்று
இவற்றுடனேயே கழிகிறது !!!

நேர்த்தியாய் அடுக்கிய
தாள்கட்டுகளை அழகிய
தீப்பெட்டிகளாய் உருவாக்கி
காய வைத்து குரோஸ் கணக்கிட்டு
கட்டி அடுக்கும் வரை ஓய்வதில்லை !
ஆனால் அதன் பின் அம்மலர்களின்
முகத்தில் புன்னகையில்லை !!!

காலையில் அழகாய்
மொட்டவிழ்ந்து மாலையில் -
சருகாய் துவண்டு காய்து
மறுநாள் மீண்டும் மலர்து...
இங்ஙனம் அன்றாடம் 
மலர்வதும் சருகாவதும்
இப்பிஞ்சுகட்கு விதிக்கப்பட்ட ஒன்றோ ??

ஒளியேற்ற துணைபுரியும்
தீப்பெட்டிகளும் தீக்குச்சிகளும்
உருவாக்கும் இவர்தம் வாழ்வில்
ஒளி பிறக்கும் 
காலமும் தான் எப்போது ?
இவர்கள் உலகிற்கே வழிகாட்டும் 
ஒளிப்பந்தங்கள் ஆவதெப்போது ??


http://www.tamilkurinji.in/news_details.php?/இவர்கள்/வாழ்வில்/ஒளி/பிறப்பது/எப்போது/-/பி.தமிழ்முகில்/நீலமேகம்/&id=30008
 


4 comments:

  1. தீக்குச்சியில் எரிந்து சாம்பலாவது இவர் கனவுகளுமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோதரி. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் !!!

      Delete
  2. ''..ஒளி பிறக்கும்

    காலமும் தான் எப்போது ?

    இவர்கள் உலகிற்கே வழிகாட்டும்

    ஒளிப்பந்தங்கள் ஆவதெப்போது ??..''
    சோகம் தான்-
    இது தீராத பிரச்சனை தான்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மனமார்ந்த நன்றிகள் கவியே !!!

      Delete