வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Thursday, April 11, 2013

தமிழ்க் கலாச்சாரம் மரித்திடலாமோ ??






தழைய தழைய அணியும்

பாவாடை தாவணி

பொன்னென மின்னும்

மஞ்சள் முக அழகு

காந்தமென ஈர்க்கும்

மையிட்ட கண்ணழகு

கலகலவென்று  ஒலிக்கும்

வளையோசை மற்றும் கொலுசொலி

வானொளிர்  கதிரவனெனத் திகழும்

குங்கும  நெற்றித் திலகம்

தரை தொடும் கூந்தல் - மனம்

மயக்கும் மலர்ச்சரம்

இவையனைத்தும் அதிவேகமாக ஓடும்

நாகரீகப் பந்தயத்தில்

தோற்கடிக்கப்பட்டு விட்டன !!!

ஆம் ! – பாவாடை தாவணி

ஜீன்ஸ் டி-ஷர்ட்களிடமும்

மணக்கும் மஞ்சள்   

வாசனைப் பவுடரிடமும்

கண் மையும் தான்

மஸ்காரா  ஐ லைனரிடமும்

மங்கள  குங்குமம்

ஸ்டிக்கர் பொட்டிடமும்

தோற்றுப் போக

தரை தொடும் கூந்தலும்

செளகரியத்திற்காய் வெட்டப்பட்டு

குதிரைவால் ஆகிவிட – அங்கு

மலர்கள் குடியேறுவதும்

குறைந்து போய் விட்டது !!!

கால ஓட்டத்தில்

நம்மை இனங்காட்டும்

கலாச்சாரமும் நாகரிகமும்

தொலைந்துவிடில் – நாளை

தமிழரும்  இருப்போம்

அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாய் !!!
http://www.kavithaiprem.in/2013/04/kavithai-ulaa-april-2-2013.html#more 

4 comments:

  1. ரசித்தேன்...

    முடிவில் உண்மை வரிகள்... நடக்கலாம்...!

    ReplyDelete
  2. ''..நாளை தமிழரும் இருப்போம்
    அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாய் !!!''
    மிகச் சரியான கூற்று சகோதரி..
    கவலையான நிலையிது.
    கருப்பொருள் மிக நன்று.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete