வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Friday, April 12, 2013

வந்து விட்டது வசந்த காலம் !!!





இலையுதிர்த்த  மரங்களெல்லாம்
மலர்களால்  அலங்கரிக்கப்பட்டிருக்க
மகரந்தங்களைத் தேடி மலர்களை
சில் வண்டுகள் ரீங்கரிக்க
குறுகிய காலத்துள்  -
மரக் கிளைகளில்
இலைகள் துளிர்த்திருக்க
உதிர்ந்த மலர்கள்
நிலமெங்கும் மலர் மஞ்சம்
அமைத்திருக்க -
எங்கெங்கு  காணினும்
மஞ்சள்  மகரந்தங்கள்
மங்களம் பரப்பிட 
கூடவே ஒவ்வாமையையும்
இலவச  இணைப்பாய்
அள்ளி வழங்கிட
உற்சாகமூட்டும் வண்ணங்கள்
நம்மைச் சூழ்ந்திருக்க
பறவைகள் பரவசமாய்
வானில் இசைபாடி
வலம் வர - உறக்கத்திலிருந்த
அணில்களும் முயல்களும்
உற்சாகமாய் துயிலெழுந்து
துள்ளியோட - வந்து விட்டது
வசந்த காலம் !!! - எங்கெங்கும்
உற்சாகமும் இன்பமும்
சூழ்ந்திருக்கவே !!!!

http://www.vallamai.com/?p=34435

10 comments:

  1. உற்சாகமூட்டும் வரிகள்...

    வசந்த காலம் எல்லார் வாழ்விலும் வரட்டும்... வாழ்த்துக்கள்...

    படங்கள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா !!! தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!

      Delete
  2. ''..வந்து விட்டது
    வசந்த காலம் !!! - எங்கெங்கும்
    உற்சாகமும் இன்பமும்
    சூழ்ந்திருக்கவே !!!!
    ...''

    சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.




    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் கவியே !!! தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!

      Delete
  3. ம் ம்.. வசந்தம் வந்துவிட்டது.. மகிழ்வே...:)
    கூடவே அலர்ஜி.. ஹச்சும் ஹச்சும் ஒவ்வாமையும்...;)

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோதரி...மகிழ்ச்சியுடன் கூடவே இலவச இணைப்பாய் !!
      ஒவ்வாமை !! வேண்டாமென்று மறுத்தாலும் விடாப்பிடியாய் பிடித்துக் கொள்கிறது.

      தங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!

      Delete
  4. நல்ல படைப்பு.
    "..கூடவே ஒவ்வாமையையும்
    இலவச இணைப்பாய்
    அள்ளி வழங்கிட.."
    மருத்துவனாய் மேலும்
    இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மனமார்ந்த நன்றிகள் மருத்துவரே !!!

      தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!

      Delete
  5. அருமையான படங்களுடன் வசந்தம் வந்ததைப் படம் பிடித்துக் காட்டும் அருமையான கவிதை, தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete