வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Friday, June 7, 2013

ஜன்னலோரத்து மழை !!!







தான் நனைந்தாலும் பிள்ளைகட்கு தன்

புடவைத் தலைப்பை குடையாக்கி விட்டு

சட்டென்று முன்னறிவிப்பின்றி

வந்துவிட்டாயே இது நியாயமா என்று

மழையுடன்  வாதிடும் அன்னை !!!



மழைக்குத் தஞ்சமடைந்த போது

கொடுத்த ஒரு வாய் உணவிற்காக

நடுங்கும் குளிரிலும் எமக்கு

நன்றியுடன் காவலாய்

இரவெல்லாம் காத்து நின்ற நாய் !!!



கொட்டும் மழையில்

துள்ளியாடும் சிறு கிள்ளையென

காற்றில் அசைந்தாடி

நீர்த் திவலைகளை வைரமென சூடி

பூரித்து நிற்கும் செம்பருத்திப் பூ !!!



சாலையோரம் பவ்யமாய்

ஒதுங்கி நின்றாலும் - சேற்றினை

பன்னீர் சந்தனமென வாரியிறைத்து விட்டு

நில்லாமல் செல்லும்

அதிவேக வாகனங்கள் !!!



சட்சட்டென்று விழும் தூறல்கள்

மண்ணை வந்து சேருமும்

தடதடவென்று ஓடிச் சென்று

காயப்போட்ட துணிகளை

அள்ளி வந்து குவித்த நாட்கள் !!!



எத்துனையோ நினைவுகளை

பசுமையாய் மனதில்

தவழ்ந்தாடச் செய்து

தண்மை தனை பரப்பும்

புத்துணர்வு மழை !!!


மழை பொழிந்த மேகங்களெல்லாம்

விலகிக் கொண்டு நிர்மலமான

வானம் தனை விட்டுச் செல்ல

கடந்தகால நினைவலைகள்

நெஞ்சமதை ஆட்கொள்ள

கார்முகிலென சூழ்ந்த எண்ணங்கள்

பொழிந்தன - மலரும் நினைவுகளாய்

ஜன்னலோரத்து மழை !!!


18 comments:

  1. /// எத்துனையோ நினைவுகளை... பரப்பும் புத்துணர்வு மழை...! ///

    படமும் வரிகளும் ரசிக்க வைத்தது... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !!!

      Delete
  2. // கடந்தகால நினைவலைகள்

    நெஞ்சமதை ஆட்கொள்ள

    கார்முகிலென சூழ்ந்த எண்ணங்கள்

    பொழிந்தன - மலரும் நினைவுகளாய்

    ஜன்னலோரத்து மழை !!!//
    எப்படிச் சொல்வது..சன்னலோரத்தில் மழையில் நான் மெய்மறக்கும் பொழுது நினைப்பதுபோலவே இருக்கிறது..அருமை அருமை, வாழ்த்துகள் தோழி! படம் கண்ணை எடுக்க விடமாட்டேன் என்கிறது :)

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி ....

      Delete
  3. முதன் முறை தங்களின் தளத்திற்கு வருகின்றேன். அருமை. மழை தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ஐயா . தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  4. முகிலின் பக்கம் முறைத்ததேனோ என்னிடம்
    பகலில் பார்த்தும் பதிவுதனை காட்டாமல்
    நேற்றைய மழைமிக நன்றே தோழி
    போற்றுகிறேன் உமை புனைந்தீர் நல்லகவி!.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      பதிவை வெளியிட்ட பின், சிற்சில பிழைகள், alignment ஒழுங்கின்றி இருந்தபடியால், மாற்ற சற்று நேரம் பிடித்தது.எனவே,வெளியிட சற்று தாமதமானது தோழி.

      தங்களது மேலான நல்லாதரவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  5. ''..தடதடவென்று ஓடிச் சென்று
    காயப்போட்ட துணிகளை
    அள்ளி வந்து குவித்த நாட்கள் !!!...''

    போன கிழமை மழை அடித்தூத்தியது இங்கு டென்மார்க்கில்.
    நான் ஓடிச் சென்று '' உடுப்பெல்லாம் நனையப் போகுது உள்ளே எடுங்கள்''... என்று பகிடி விட்டேன் கணவரிடம்.
    . அப்படி ஓரு மூட் எனக்கு வந்தது.
    அப்படி நினைவுகளை கிளறும் வரிகள்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் கவியே.துணிகளை துவைத்து காய வைப்பதற்குள் மழை வந்து விட்டால், அதன் பின் அவற்றை காய வைப்பதற்குள் பெரும்பாடு தான்.வீட்டினுள் காயப் போட்டாலோ, வீடெங்கும் ஈர வாடை தான்.


      தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!

      Delete
  6. எத்துனையோ நினைவுகளை

    பசுமையாய் மனதில்

    தவழ்ந்தாடச் செய்து

    தண்மை தனை பரப்பும்

    புத்துணர்வு மழை !!!

    அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  7. //எத்துனையோ நினைவுகளை

    பசுமையாய் மனதில்

    தவழ்ந்தாடச் செய்து

    தண்மை தனை பரப்பும்

    புத்துணர்வு மழை !!!// அருமை எப்பொழுதுமே மழை பல நினைவுகளை மீட்டியே செல்லும்

    ReplyDelete
    Replies
    1. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் தோழி . தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  8. அமெரிக்க மொழியில் சொல்வதானால் உங்களின் இந்தக் கவிதை ‘சூப்பர்-டூப்பர்’!

    ReplyDelete
  9. அன்பின் பி.தமிழ் முகில் - அருமையான கவிதை

    பிள்ளைக்காக மழையுடன் வாதிடும் அன்னை
    நன்றியுடன் காத்து நிற்கும் நாய்
    பூரித்து நிற்கும் செம்பருத்திப் பூ
    பன்னீர் சந்தனம் வாரி இறைத்த வாகனங்கள்
    காயப் போட்ட துணிகளை அள்ளிக் குவித்த நாட்கள்
    புத்துணர்வு ஊட்டும் மழை
    மல்ரும் நினைவுகளாய் ஜன்னலோரத்து மழை

    மழையினைப் ப்ற்றிய பல்வேறு பத்திகளுடன் எழுதப் பட்ட கவிதை நன்று நன்று நல்வாழ்த்துகள் -- நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான நல்வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete