வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Tuesday, July 30, 2013

தென்றல்....



உயரமாய் வளர்ந்து
நிமிர்ந்து  நிற்கும்   மூங்கிலதில்
வளைந்து  நெளிந்தாடி
வருடும் தென்றல் - ஒலிக்கும்
சிந்தைகவர் வேணுகானமாய் !!!


வளைந்து  நிமிர்ந்த   நாணல்
வண்ண  முத்திரைகள்  காட்டி
வதனமதில் புன்னகை பூட்டி
கானமிசைக்கும்  தென்றலுக்கு ஏற்ப
ஆடும் எழில் நர்த்தனமாய் !!!


புத்தம் புதிதாய்  அலர்ந்து
எழில்  வண்ணம்  சூடி
சிந்தை தனைக்  கவர்ந்து
புன்னகை  உதிர்க்கும்  மலர்தனில்
தென்றல் - உயிர்நாடி தழுவும் நறுமணமாய் !!!


சிந்திய  சருகுகள் தனை
சற்றே  தொட்டுச் சென்று
சிரித்தோடி விளையாடும்
சின்னஞ்சிறு  தென்றல் -
சலசலக்கும் சலங்கை ஒலியாய் !!!


நாசிதனில்  நுழையும் தென்றலது
தால்  மெல்ல அசைய - ஜனனமெடுக்கும்
உளம்தனை  உருக்கி
உயிர்தனை  வருடும்
இனிய மெல்லிசையாய் !!!


மேகக் காதலனோடு கிசுகிசுக்கும்
மரமாகிய பெண்ணவளுக்கு
காதல் நாயகனின் பரிசாம்
மழை முத்தங்களை  தென்றலது
பத்திரமாய் முத்திரையெனச்  சேர்க்கும் !!!


21 comments:

  1. //மழை முத்தங்களை தென்றலது
    பத்திரமாய் முத்திரையெனச் சேர்க்கும் !!!//
    அருமையான கவிதை வரிகள் ,தமிழ் முகில். ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கும் ரசனைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  2. மூங்கிலத்தில்
    வளைந்து நெளிந்தாடி//சரி செய்யவும்.


    மேகக் காதலனோடு கிசுகிசுக்கும்
    மரமாகிய பெண்ணவளுக்கு
    காதல் நாயகனின் பரிசாம்
    மழை///அற்புதம்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் ஐயா. திருத்தி விட்டேன்.

      தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  3. உற்சாகமூட்டும் நறுமணத்துடன் வயல்வெளியில் செல்லும் அந்த சுகமே தனி...

    ரசிக்க வைக்கும் கவி வரிகளுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா...

      Delete
  4. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நான் இத்தனை நாள் .com என்று இருப்பதாகத் தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

      Delete
  5. இயற்கை அழகு இழைந்தோடுது உங்க கவிதையில்...,

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பானதொரு கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  6. இயற்கைக்கு மேலும் அழகூட்டும் உங்கள் இனிய வரிகள்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  7. இப்போது தமிழ்மணம் வேலை செய்யும்... மெயிலில் கூறியபடி தொடர்க... வாழ்த்துக்கள்... மிக்க நன்றி...

    ReplyDelete
  8. தென்றலின் மிக நல்ல வருணனை. நல் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!

    ReplyDelete
  10. தென்றல் கவிதை வரிகள் எமது உள்ளத்தையும்
    வருடிச் சென்ற விதம் அருமை ! பாராட்டுக்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி..

      Delete
  11. தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றிகள் தோழி.வலைப்பூ துவங்கி எனது ஆக்கங்களை பதிவு செய்து மகிழ்ந்த தருணங்கள் மறக்க முடியாதவை. விரைவில் எழுதுகிறேன் தோழி.

    ReplyDelete
  12. தென்றலில் நீ கண்ட
    தேமதுர ராகங்கள்
    சிந்தைக்குள் வந்தே
    செழிக்கிறது என்னெஞ்சில்....!

    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், கவித்துவமான வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !!!

      Delete