வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Wednesday, April 23, 2014

கடல் - காதல்



தென்றலும் கலகலவென
எதிர்படுவோரை  எல்லாம்
நலம்  பாராட்டி
உபசரித்துச்  செல்ல

கடல் அலையெலாம்
சுற்றம்  தனை  வரவேற்று
பன்னீர்  தெளித்து - புது
உற்சாகம் ஊட்ட

வெண்பஞ்சு  மேகமெலாம்
கவின்மிகு  காட்சியில்
இலயித்துப் போய்
தமை மறந்து மிதக்க

கண்கொளாக்   காட்சியாய்
அரங்கேறுது - இங்கே
நீலவான் - நீலக்கடலின்
காதல்  சங்கமம் !
 
 

12 comments:

  1. ஆகா... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தமிழ்மணம் இணைத்து விட்டேன்... நன்றி... +1

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மண வாக்கிற்கு நன்றிகள் ஐயா.

      Delete
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
    Replies
    1. அறியத் தந்தமைக்கு நன்றிகள்.

      Delete
  4. இனிதான உணர்வலைகள் ! வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  5. கடலின் காதல் வானோடா? பாவம் சேர்த்திருப்பது போல் தெரிந்தாலும் சேரவே போவத்தில்லையே அவர்கள்.ஹா....ஹா...அருமை முஹில்!!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தோழி

      Delete
  6. நீல வானம் - நீலக் கடல் சங்கமம்.... சிறப்பான கற்பனை....

    கடலை எத்தனை நேரம் பார்த்தாலும் அலுக்காது...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      Delete