வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Saturday, May 30, 2015

பட்டுப் புழுவின் வாழ்வு


பட்டாம் பூச்சியாய் சிறகடித்து
உலகின் வண்ண மலரெலாம்
வட்டமடித்து சுற்றித் திரிய
ஆசை கொண்டேன் ! - பொற்காலம்
எண்ணி தவம் கிடந்தேன் !
பருவமும் வந்தது - கனவு நினைவாக
சிறகடிக்க ஆயத்தமானேன் !
புழுவாய் ஊர்ந்த நானும் எந்தன்
உமிழிக் கூட்டுள் அடைக்கலமானேன் !
எந்தன் உலகம் சுருங்கிய போதும்
ஆசைக் கனவு சுருங்கவில்லை !
ஆனால்.....
ஏனோ இறைவா ! ஏனிந்த வேதனை !
எதிர்பாரா நொடியில்
வெந்நீரில் வெந்து மாண்டேன் !
என் உமிழ்நீரே எனக்கு
எமனாகிப் போனதே !
மானிடரின் சுயநலத்திற்காய்
எம் இனம் மாள்வது
என்ன நியாயமோ ?
இறைவா ! உம் பார்வையில்
எம் துயர் படவில்லையோ ?
உந்தன் கருணை பார்வை
எம் மீது படும் காலம் வருமோ ?

http://www.vallamai.com/?p=57939

6 comments:

  1. மானிடரின் சுயநலத்திற்காய்
    எம் இனம் மாள்வது
    என்ன நியாயமோ ?//

    அருமையான நியாயமான கேள்விகளுடன் ஆக்கம் அருமை. பாராட்டுகள். வல்லமையில் வெளிவந்துள்ளதற்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. என் உமிழ்நீரே எனக்கு
    எமனாகிப் போனதே !

    வேதனை மிகு வரிகள்
    தம 1

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  3. Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete