வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Friday, June 26, 2015

கவிதைகள் - மனங்களின் பிம்பங்கள் !


மழை சுமந்து திரிந்த மேகங்கள்
மண்ணின் மடிதனில் மழைதனை
இறக்கி வைத்திட்டு - ஆகாய வீதியில்
காற்றுடன் தவழ்ந்தாட
எழில் நீலம் சூடிய ஆகாயம்
மெல்ல மேகத் திரை விலக்கி
பூமிக்கு முகம் காட்டி
புன்னகை வீசி வகீகரிக்கிறது !

வானின்று மண் நோக்கி
வருகின்ற மழை துளியை
தன் கிளைதனில் ஏந்தி
வைரம் சூடிய பெருமிதத்தோடு
ஆதவன் சற்றே முகம் காட்டினால்
தக தகவென ஜொலித்து - காணும்
மனங்களை சொக்க  வைத்திட
ஆவல் மேலோங்க அசைந்தாடும் மரம் !

இலையதுவே மரத்திற்கு
ஆடையாகிப் போக
பச்சை நிற ஆடையே உடுத்தி
சலித்துப் போனதோ
இந்த மரப் பெண்ணிற்கு ?
மஞ்சளும் அடர்சிவப்புமாய் - இளம்
தளிரையும் பழுத்த இலையையும்
உடுத்தி தன் அழகினை இரசிக்கிறாளோ ?

இயற்கையில் ஆயிரமாயிரம்
வண்ணங்கள் - வண்ணங்களின் எழிலில்
மனதில் தோன்றும் பலவகை
எண்ணங்கள் - எண்ணங்கள் எழுத்தானால்
பிறக்கும் மகிழ்வுடன் புதுப் புது
கற்பனைகள் - கற்பனைகள் வடிவு பெறின்
உரு பெறும் புதுக் கவிதைகள்
கவிதைகள் - மனங்களின் பிம்பங்கள் !

www.vallamai.com/?p=58913

11 comments:

  1. அழகான வரிகள்.... ரசித்தேன்....

    ReplyDelete
  2. இயற்கையில் ஆயிரமாயிரம்
    வண்ணங்கள் - வண்ணங்களின் எழிலில்
    மனதில் தோன்றும் பலவகை
    எண்ணங்கள் - எண்ணங்கள் எழுத்தானால்
    பிறக்கும் மகிழ்வுடன் புதுப் புது
    கற்பனைகள் - கற்பனைகள் வடிவு பெறின்
    உரு பெறும் புதுக் கவிதைகள்
    கவிதைகள் - மனங்களின் பிம்பம் !

    சிறப்பான வரிகள் மட்டுமல்ல, படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் வரிகள்! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் பல ஐயா.

      Delete
  3. சிறப்பான கற்பனை. ரசித்தேன்.

    ReplyDelete
  4. அழகான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //பச்சை நிற ஆடையே உடுத்தி
    சலித்துப் போனதோ
    இந்த மரப் பெண்ணிற்கு ?
    மஞ்சளும் அடர்சிவப்புமாய் - இளம்
    தளிரையும் பழுத்த இலையையும்
    உடுத்தி தன் அழகினை இரசிக்கிறாளோ ?//

    :) அழகாக கற்பனை செய்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். :)

    ReplyDelete
  6. அருமையான வரிகள் தோழி
    வாழ்த்துகள்

    ReplyDelete