வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Saturday, July 11, 2015

அன்பு உள்ளங்கள்



காதலின் கதகதப்பில்
கலந்திட்ட ஜீவன்கள்
ஒருவருக்கொருவர்
ஆதரவாய் அனுசரனையாய்
அன்பு உலகில்
ஆனந்தமாய் சஞ்சரிக்கிறார்கள் -
சுற்றியிருக்கும் சூழல் தனையே
மறந்தவர்களாய் !
அவர்தம் வாழ்விடத்தை விட்டு
நம் வசதிக்கேற்ப  கூண்டில்
குகையில் அடைக்கிறோம் !
அவர்களை காட்சிப் பொருளாய்
நாம் எண்ணிக் கொள்கிறோம் ....
உண்மையில் 
நாம் அவர்களுக்கு
காட்சிப் பொருளாகிறோம் !
சமயங்களில் அதீத விளையாட்டால்
அவைதம் இரையாகவும்
மாறிப் போகிறோம் !
இயற்கையின் இயல்பை
மாற்ற எத்தனித்தால்
அழிவு நமக்கென்பதை
நாம் உணரும் காலம் எப்போது ?





11 comments:

  1. Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.

      Delete
  2. தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் அளித்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  3. அருமையான வரிகள்...உண்மையை உரைக்கின்றன...

    இயற்கையின் இயல்பை
    மாற்ற எத்தனித்தால்
    அழிவு நமக்கென்பதை
    நாம் உணரும் காலம் எப்போது ? // எப்போது??

    ReplyDelete
  4. கவிதை அருமை...
    உண்மையை உரைக்கிறது...

    ReplyDelete
  5. ரசித்தேன். அருமை.

    அவைகளின் இயல்பறியாமல் வதைக்கிறோம். சக்தி அறியாமல் அடைக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோதரரே.

      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  6. உண்மைதான்..அருமையான கவிதை

    ReplyDelete