வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Friday, September 25, 2015

மிளிரும் அழகிய பண்பாடு !





இதயமும் இங்கே சுருங்கிடவே
இடைவெளி விரிந்து போனதுவே !
தன்னலம் கருதா உற்ற உறவிடை
உன்னத நம்பிக்கையும் மரித்ததுவே !
கைபேசி கணினி குறுந்தகவல் என
கைக்கெட்டும் தூரத்தில்  உறவுகளிருந்தும்
மகிழ்வாய் அளவளாவ முடியாது
மனம் ஏனோ விலகியோடி சென்றதுவே !
உற்ற உறவின் அருகாமையும் - ஏதோ
உருவிச் செல்லவே காத்திருப்பதாய்
உள்ளம் அதுவும் நம்பாது துடிதுடிக்க
உறவுகளும் துடித்து வெடித்து மருகுகின்றனவே !
வாழ்வதன் தரமும் வாழ்வு முறையும் முன்னேற
நம்பிக்கையும் நல்லெண்ணமும் பின்னேறுகிறதே !
கலகப்பாய் மகிழ்ந்திருக்க வேண்டிய பொழுதெலாம்
கலங்கி மருகி மருகியே வீணாய் கழிகிறதே !
இறைவன் வகுத்த உறவெல்லாம்
காரணமின்றி உருவாகவில்லையே ?
இன்றியமையா உறவின் உன்னதம் தனை
உணரும் வேளை எது தானோ ?
பிரிவினைவாத எண்ணங்களும்
வெருண்டோடும் வேளைதனிலே
உள்ளம் அதுவும் அழகாகும் -
அழகான உள்ளந்தனிலே
மிளிரும் - அழகிய பண்பாடு !


புகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
நன்றி, perpendicularity.org


உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.


13 comments:

  1. நல்ல கவிதை.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல சகோதரரே.

      தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  2. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அருமை
    யெவற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வணக்கம் சகோ! அழகிய பண்பாடு அருமை! நல்வாழ்த்துக்கள்! வெற்றி பெற!
    நேரமிருப்பின் என் கவிதைகளுக்கும் தங்கள் கருத்து தாருங்கள்! நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் சகோதரரே. நிச்சயம் தங்களது கவிதைக்கு கருத்துரை இடுகிறேன்.

      Delete
  5. அருமையான கவி வரிகள்,
    வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நீரோட்டமாய் வந்து விழுந்தன சொற்கள் நெற்றியடியாய். அழகு! அருமை!
    வெற்றி பெறவென் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete