வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Tuesday, December 8, 2015

யாசகம்





வாரிக் கொடுத்து வாழ வைக்க
இளமையெலாம் தெம்பும் துட்டும்
நிறைந்திருந்தும் - செருக்கு
தலைக்கேறி நின்றதால்
உதவும் எண்ணமுள்ள
மனம் இல்லை !

வயோதிகம் உடலை முடக்கி விட
உறவுகளும் ஒதுங்கியோடி மறைந்துவிட
வயிற்றுப் பசி நிரந்தரமாய் துணையாகிட
பசி வந்ததும் அனைத்தும் பறந்தோட
மனம் புழுங்கினாலும் வழியில்லாது
கை கேட்கிறது யாசகம் !


தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர்  8ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.

தினமணி - கவிதைமணி 

13 comments:

  1. சகோதரி, பரிசுப் பணம் தாங்கள் தந்திருந்த வங்கிக்கணக்கிற்கு வந்ததா?
    தங்களிடமிருந்து பதிலேதும் வரவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. பரிசுப் பணம் பெற்றுக் கொண்டேன் ஐயா. தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் ஐயா. நன்றிகள் பல ஐயா.

      Delete
  2. //தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர் 8ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.//

    மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த பாராட்டுகள் + இனிய நல்வாழ்த்துகள். ’யாசகம்’தான் என்றாலும் அது டிசம்பர் 8ல் வெளியானது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.:)

    ReplyDelete
  3. ஹ்ம்ம்ம் பாவம்
    நல்ல கவிதை தோழி

    ReplyDelete
  4. உருக்கம்....முதுமை போற்றாத நாடும் ...மனிதனும் எந்த நாளும் உருப்படப்போவதில்லை...
    இது யாசகம் இல்லை.....நாளைய நமக்கு ஒரு யோசனை...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் சகோ.

      Delete
  5. அருமையான கவிதை சகோ

    ReplyDelete
  6. தினமணியில் வெளியானமைக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றிகள்.

      Delete