சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கடந்த வாரம் அவர் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது புகைப்படமும், அதற்கு நான் எழுதிய கவிதையும்.
அவரது புகைப்படமும், அதற்கு நான் எழுதிய கவிதையும்.
ஆடி விளையாடும்
ஆறும் இன்று
காணவில்லையே என
மணலுள் தேடித் தேடி
ஓய்ந்தவளாய் - வீடு
திரும்புகிறாளோ ? -
சிறு கிள்ளை !
வான் பொய்ப்பினும்
தான் பொய்யா காவிரி
கண் முன் மணல் மேடாய்
காட்சிப் படுகிறது - நன்றாக
பார்த்துக் கொள் சிறு நங்கையே !
நாளை மணலும் கூட
மாயமாகிப் போய் - காவிரி
கட்டாந்தரையாய் காட்சியளித்தாலும்
ஆச்சர்யமில்லை ! - மீண்டும் இங்கு
காவிரி புது நுரையாய் பொங்கி ஓட
சிவபெருமானிடம் காவிரியை
அகத்தியர் பெற்று வர - விநாயகர்
காகமென வடிவெடுத்து வந்து
கமண்டலத்தை கவிழ்த்திட வேண்டுமோ ?
சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதைக்கான இணைப்பு
No comments:
Post a Comment