ஆசுவாசமாய் பொழுதை கழிக்க
ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ
ஆதவன் ? அவர்தம் ஓசோன் மெத்தையில்
ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது
வான் வெளியில் மிதந்து திரிகிறாரோ ?
தண்மை வழங்க தலையசைத்தாடி வரவேற்கும்
மரங்களின் மடியில் சற்றே இளைப்பாற எண்ணியே
எங்கெங்கும் தேடித் திரிய - உயிரும் உணர்வுமான மரங்கள்
கற்கட்டிடங்களாக உருமாறிக் கிடக்க - ஏமாற்றத்தால்
ஏங்கியே அக்கினி பெருமூச்சினை விடுகிறாரோ ?
செயற்கையாகிப் போன தன் மன எண்ணங்களை போன்றே
இயற்கையை விஞ்சிட எத்தனித்து செயற்கை படைக்க
துடிக்கும் மானுட இனத்தை பழி வாங்க - இயற்கை
கையிலெடுக்கும் ஆயுதம் தான் சுட்டெரிக்கும் வெயிலும்
சுழன்றடிக்கும் காற்றும் மழையும் - தாங்கவொன்னா குளிருமோ ?
இயற்கையில் தன் செயற்கை குப்பைகளை திணித்து விட்டு
அந்தக் குப்பைகளே கோமேதகக் கோபுரங்களென எண்ணி
பெருமிதம் கொள்ளும் நாமனைவரும் திருந்தி - கண் திறக்க
காலம் நெருங்கி நம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறது !
இயற்கையோடு இயைந்து மகிழ்வோம்! இன்பமாய் வாழ்வோம் !