வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Wednesday, April 15, 2020

மகள்

உள்ளத்தாலும் உணர்வினாலும்  
உன்னில் என்னைக் கண்டே     
என்னில் உன்னை நிறைத்தே                       
நாளெலாம் கடக்கிறேன் !
காலத்திற்கும் சிநேகிதியாய்
கதைகள் பேசி இலயித்திருக்க
ஏற்றம் தாழ்வு எதுவரினும்
தோள் கொடுக்கும் தோழியாய்
கண்மணி உனக்கு நானிருப்பேன்
எந்தன் மடியில் முகிழ்த்த நல்முத்தே !

இக்கவிதை அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாசிக்கப்பட்டது.

வாசிக்கப்பட்ட கவிதைகள் அனைத்தும், youtube வீடியோவாக உள்ளது.

https://youtu.be/2Shsuo1NxyI

நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்


திராவிட வாசகர் வட்டம் நடத்தும், பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020 க்கு நான் எழுதிய 5 சிறுகதைகள்.அமேசான் கிண்டிலில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். Kindle Unlimited வைத்திருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://www.amazon.in/dp/B08669MCPX/ - கூட்டு வாழ்வு
https://www.amazon.in/dp/B086CY2MQ9/ - கும்பி கற்ற பாடம்

இவ்விரு நூல்களும் இப்போது, free promotion ல் உள்ளது. நண்பர்கள் வாசித்து, review எழுதினால், போட்டியின் அடுத்த நிலைக்கு செல்ல உதவியாக இருக்கும். போட்டியின்  அடுத்த நிலைக்கு செல்ல 10 review க்கள் தேவைப்படுகிறது. இயன்ற நண்பர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

https://www.amazon.in/dp/B08721CK7J/ - பென்குவினின் கதை
https://www.amazon.in/dp/B085DNRVZX/ - பிளாஸ்டிக்கில் இருந்து விடுபடுவது எப்படி?https://www.amazon.in/dp/B085VK46SX/
பூச்சிகளும் பூச்சிகளை உண்ணும் செடிகளும்

அனைத்து நூல்களையும் Kindle unlimited வைத்திருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களும், amazon reviews ம், புத்தகம் முதற்கட்டத் தேர்வில் இடம்பெற உதவும்.

உதவும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.









9 comments:

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள். ஒரு புத்தகம் தரவிறக்கம் செய்து விட்டேன். விரைவில் வாசிப்பேன்.

    ReplyDelete
  2. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே. Review உங்களால் எழுத இயலுமெனில் எழுதுங்கள். இல்லையென்றாலும் பராவாயில்லை. உங்கள் கருத்துக்களை எனக்கு அறியத் தாருங்கள்.

    ReplyDelete
  3. கவிதை அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!

    தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!

    உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை

    நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 31 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

    இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

    ஒரே பார்வையில் எமது தளங்கள்:
    1. வலை ஓலை
    2. எழுத்தாணி
    3. சொல்

    முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

    நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    அனைவருக்கும் நன்றி!

    -வலை ஓலை

    ReplyDelete
  5. கூட்டு வாழ்வு தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன்... வாசிக்கிறேன் ...

    ReplyDelete
  6. மிக்க நன்றி ஐயா. உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. கவிதை அருமை. வாழ்த்துகள்.

    கீதா

    ReplyDelete
  8. சிறப்பான பதிவு

    ReplyDelete