வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Thursday, March 6, 2014

பிள்ளைக் கனியமுதே ! -1


உன்னாலே ! உன்னாலே !!




விழி சுமந்த
கனவுகளெல்லாம்
விரிந்தது கண்முன்
நிஜங்களாய் !

விழி சொரிந்த
உவர்ப்பு நீரெல்லாம்
விழிகளும் புன்னகைக்க
உருண்டோடின ஆனந்தத் துளிகளாய் !

மௌனத்தையே  தன்
மொழியென  கொண்டிருந்த
உதடுகளும் விரிந்தன மெல்ல
புன்னகையை ஆடையென உடுத்தி !

விழி துயிலும் இரவுகளெலாம்
சுறுசுறுவென இயங்கும் பகலாய் !
ஆதவன் சிரிக்கும் பொழுதுகளோ
அசந்து கண்ணயரும் வேளைகளாய் !

மெத்தைகளும் பஞ்சனைகளும்
உனை எதிர்பார்த்தே உறக்கத்தில்
அசந்து போய்விட - உனக்கோ
அன்னையின் மடியே ஆனது தொட்டிலாய் !

மொத்தத்தில் உலகமே
உருமாறித் தான் போனது !
புது விதமாய்த் தான் விரிந்தது -
கண்மணிக் கிள்ளையே உன் வரவால் !

12 comments:

  1. அற்புதமான கவிதை
    அந்தச் சுகம் அறிந்தவர்கள்
    கூடுதலாக இந்தக் கவிதையை ரசிக்க முடியும்
    நான் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. Replies

    1. தமிழ் மண வாக்கிற்கு நன்றிகள் ஐயா.

      Delete
  3. இனிமையான வரிகள் மனதிற்கு மகிழ்வைத் தந்தது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  4. சிறப்பான வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோ .

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி .

      Delete
  5. மிக அருமை தோழி...இனிமை சொல்லும் கவிதை..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி .

      Delete
  6. இனிமையான கவிதை.... பாராட்டுகள்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !

      Delete