வலைச்சரத்தில் எனது பதிவுகள்

Saturday, March 8, 2014

பெண்மை உணர்ந்திடுவோம் !


பெண்ணெனவே புவிதனில்
பிறப்பெடுத்தோம் - பொன்னாய்
போற்றி பாதுகாக்கப் பட்டோம் !
இளவரசியாய் இன்பமாய்
அன்பு  மழையிலே
அலுக்காது நனைந்திட்டோம் !

திருமணம் என்ற வரம் வாங்க
பொன் கொட்டிக் கொடுத்த போதும்
புண்பட்டே துடித்திட்டோம் !
கொண்ட கடமை அனைத்தும்
கசடற நிறைவேற்றினாலும்
கருத்துரிமை கூட மறுக்கப்பட்டோம் !

கல்வி தனை துணை கொண்டோம்
கருத்துடனே செயல்பட்டோம்
ரௌத்திரம் பழக  மறந்திட்டோம் !
மென்மையான மலரேன்றே எண்ணி
மனிதம் சிறிதுமில்லாது கசக்கி
பந்தாடி பிய்த்து எறியப்பட்டோம் !

பெண் அழகுக்கு அடையாளமாகிறாள்
பெண் அன்புக்கு அடையாளமாகிறாள்
பெண் அமைதிக்கு அடையாளமாகிறாள்
பொங்கி எழும் அக்கினி குழம்புக்கு
பெண் அவள் அடையாளமாகும் முன்
உணர்ந்திடுவோம் !

பெண்ணும் உலகத்து உயிர்களைப் போல்
உணர்வுகள் தன்னுள் கொண்டவளென்று
இரத்தம் சதையினால் ஆனவளல்ல பெண் -
அன்பு பாசம் தியாகம் - இவற்றின் கலவையே
பெண் - உணர்ந்து காத்திடுவோம் ! அவர்தம்
உணர்வுகளை மதிப்போம் !


மகளிர் தின நல்வாழ்த்துகள் !!!

12 comments:

  1. அருமை...

    சர்வதேச மகளின் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. அருமையான கவிதை தோழி
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி .

      Delete
  3. பெண்ணினத்தைப் போற்றிப் பாடும் சிறப்பான கவிதைக்கு பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் சகோதரா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

    வலைச்சர தள இணைப்பு : பளப்பளன்னு சொலிக்கனுமா ??

    ReplyDelete
    Replies
    1. அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

      Delete
  5. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு என் இனிய வாழ்த்துக்கள் சகோதரா !

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  6. அருமை.....

    மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete