உயரமாய் வளர்ந்து
நிமிர்ந்து நிற்கும் மூங்கிலதில்
வளைந்து நெளிந்தாடி
வருடும் தென்றல் - ஒலிக்கும்
சிந்தைகவர் வேணுகானமாய் !!!
வளைந்து நிமிர்ந்த நாணல்
வண்ண முத்திரைகள் காட்டி
வதனமதில் புன்னகை பூட்டி
கானமிசைக்கும் தென்றலுக்கு ஏற்ப
ஆடும் எழில் நர்த்தனமாய் !!!
புத்தம் புதிதாய் அலர்ந்து
எழில் வண்ணம் சூடி
சிந்தை தனைக் கவர்ந்து
புன்னகை உதிர்க்கும் மலர்தனில்
தென்றல் - உயிர்நாடி தழுவும் நறுமணமாய் !!!
சிந்திய சருகுகள் தனை
சற்றே தொட்டுச் சென்று
சிரித்தோடி விளையாடும்
சின்னஞ்சிறு தென்றல் -
சலசலக்கும் சலங்கை ஒலியாய் !!!
நாசிதனில் நுழையும் தென்றலது
தால் மெல்ல அசைய - ஜனனமெடுக்கும்
உளம்தனை உருக்கி
உயிர்தனை வருடும்
இனிய மெல்லிசையாய் !!!
மேகக் காதலனோடு கிசுகிசுக்கும்
மரமாகிய பெண்ணவளுக்கு
காதல் நாயகனின் பரிசாம்
மழை முத்தங்களை தென்றலது
பத்திரமாய் முத்திரையெனச் சேர்க்கும் !!!