Sunday, March 31, 2013

நற்றுணை




தனிமையில் துணையென  வந்தாய்
என் மனதை இறுக பற்றிக் கொண்டாய்  !!!
உன்னுள் கட்டுண்டேன் நானும்
உலகையே மறக்கச் செய்தாய்  !!!

அமைதியாய் தான் இருந்தாய் நீ -
ஆனால் என் மனதில் தான்
நீயும் ஏற்படுத்தினாய்
ஆயிரமாயிரம் சலசலப்பு !!!

என் கைகளுள் நீ
தஞ்சமடையும் வரை
அறியவில்லை - என்னை
இந்த அளவு வசீகரிப்பாயென்று !!!

என்னை விட்டு இம்மியும்
நீ  நகர்ந்ததுமில்லை !!-என்னை
நகர விட்டதுமில்லை !!!
கவசமாய்   உடனிருந்தாய் !!!

ஓர் நாளும் என்னை
நீ வஞ்சித்ததும் இல்லை !!
வஞ்சனை என்ற சொல்லை
நீ அறிந்திருக்கவுமில்லை !!!

உன்னைப் போல் உற்ற துணையை
நான் கண்டதுமில்லை !
இனி காணப்போவதுமில்லை !!
நற்றுணையான  புத்தகமே !!!

http://eluthu.com/kavithai/117865.html 

Friday, March 29, 2013

கண்மணியே !!!



 



கண்மணியே !!
உன் வரவிற்காய்
காத்திருந்த வேளைகளில்
நேரமும் காலமும் கூட
சதி செய்து சக்கென்று
நின்று கொண்டு
நகர  மறுத்து சண்டித்தனம்
செய்தது போன்றொரு பிரமை !!!

பொழுது போகாத சிலபேர்
நட்பென்று சொல்லிக் கொண்டு
நயமாய் பேசுவதாய் எண்ணிக் கொண்டு
நச்சென்று நெஞ்சில் ஆணி இறக்குவர் ……………
நம் ஏக்கமதையும் மறந்து எள்ளி நகையாடுவர் !!
துன்பத்தை துயரத்தை கிண்டிக் கிளறி மகிழ்ந்தோருக்கு
இன்றவர் நினைவலைகள் தனில் கடந்து போகும்
மேகமாய்க் கூட நாமிருப்பதற்கு வாய்ப்பில்லை !!!

காலத்தின் சுழற்சியில்
காயப்படுத்தியோர் எல்லாம்
காணாமல் போய்விட
கண்ட கனவுகளெல்லாம்
கண்முன் இன்று நிஜமாகி
களிப்பளித்திட ஒவ்வோர்
கணமும் வாழ்வுதனில்
கற்கண்டாய் !!!

Thursday, March 28, 2013

ஆசான்

அன்னையும் பிதாவும்
கொடுத்த அறிவினை
சுடர் விட்டெரிய செய்யும்
தூண்டுகோல் !!!

கண்டிக்கும் வேளையில்
சற்று கரடு முரடு தான்
கற்றுத் தரும்
ஆசான்கள் எப்போதும் !!!

அவர்தம் உள்ளந்தனில்
மாணாக்கரின் நினைவுகள்
என்றென்றும் - நினைத்தாலே
இனிக்கும் கற்கண்டுகள் !!!

கற்ற கல்வியையும் -பெற்ற
அனுபவத்தையும் நாளும்
போதனை மூலம் உலகிற்கு
பரப்பிடும் ஒளி விளக்குகள் !!!

அன்றாடம் கற்பித்தலின் மூலம் 
தானும் கற்றுக் கொண்டே 
இருக்கும் வளர்ந்து விட்ட
பிள்ளைகள் -ஆசான்கள்!!

http://www.vallamai.com/?p=33998 

Tuesday, March 26, 2013

விழிகளில் இறைவன்





அகல விரிந்த
விழியிரண்டில்
என்ன தேடலோ ??
அன்னை வாங்கி
வைத்திருக்கும்
இனிப்பு பண்டத்திற்கான
எதிர்பார்ப்போ ? - அன்றி
தந்தை வாங்கி வருவதாய் சொன்ன
புத்தம் புது பொம்மைகட்கான
தேடலோ ?? - இல்லை
தொலைக்காட்சியில் வரும்
பொம்மைப் படங்களின்
ஈர்ப்போ  ?? - எதுவாயினும் சரி !!!
கண்மணியே !!!
உந்தன் அழகு கொஞ்சும்
விழிகளின் வழியே
இறைவனும் தெரிகிறான் !!!
அறியாமை பொங்கும்
எழில் முகத்தில்
இன்பமும் நிழலாடுகிறது !!!
துன்பமே அறியா
பிள்ளைப் பருவம்
மீண்டும் வாராதோ எனும்
ஏக்கமும் எம் மனதில்
குடிகொண்டு விட்டதே ???



http://www.kavithaiprem.in/2013/03/kavithai-ulaa-march-16-2013.html

கற்றுக் கொடேன் –அன்னம் விடு தூது





பிரித்தறிய முடியாத
பால் நீர்க் கலவையினின்று
நீரைப் பிரித்தெடுத்து
தூய்மையான பாலை
பருகும் அன்னப் பட்சியே
உலக    மாந்தருள்
பிரித்தறிய இயலாதவாறு
விரவிக் கிடக்கும்
நல்லவர் தீயவர்
இனம் காண
நல்லதொரு உத்தியை
கற்றுக் கொடேன் !!!


venkatnagaraj.blogspot.com/2013/04/9.html

 

 


கவிதை எழுதியமைக்குபூங்கொத்து வழங்கி  கௌரவித்தமைக்கு திரு.வெங்கட் நாகராஜ் அவர்கட்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

Sunday, March 24, 2013

ஆனந்தத் துயில் !!!


அன்னையும் தனது
பொன் வாய் திறந்து
தாலசைத்து .....
கண்ணே நீயுறங்கென்று
இன்னிசையுடன் பாட
அவளது தோளும்
பொன் மஞ்சமாகிட
உறக்கமும் மெல்ல
கண்களைத் தழுவ
அமைதியான
இரவின்  மடிதனில்
கிள்ளையின் -
ஆனந்தத்  துயில் !!!
http://www.kavithaiprem.in/2013/03/kavithai-ulaa-march-20-2013.html 
Related Posts Plugin for WordPress, Blogger...