ஒளியின் பெருநாளாம் தீப ஆவளி திருநாளில்
உள்ளத்து அறியாமை இருளகற்றி
அன்பெனும் அருள் விளக்கினை
இதயங்களில் ஏற்றிடுவோம் !!!
உள்ளமதில் தோன்றும்
வெறுப்பு பகை மறந்து
கலகப்பாய் சரவெடியென
பேசிச் சிரித்து மகிழ்ந்திடுவோம் !!!
பண்டிகை பதார்த்தத்துடன்
பாசத்தினையும் பகிர்ந்திடுவோம்
பலமான அன்புறவு தனை
பாங்குடனே வளர்த்திடுவோம் !!!
சிதறும் மத்தாப்புகளென
சிரிப்பினை உதிர்த்திடுவோம்
சிந்தனைகளை உயர்வாய் கொண்டு
சித்தமாக்கிடுவோம் காரியங்களை !!!
கவலைகளை புஸ்வானமாய்
தெரித்தோடச் செய்து விட்டு
அழகான புன்னகையால்
தீபங்கள் ஏற்றுவோம் !!!
நெஞ்சில் இரக்கம் மிக கொண்டு
உதவி நாடும் உள்ளங்கட்கு - என்றென்றும்
ஆதரவுக்கரம் நீட்டுவோம் ! - அவர்தம் மகிழ்ச்சி
புன்னகையாய் நம் உதடுகளில் ஒட்டிக்கொள்ள
நாம் சிரிக்கும் நாளே திருநாள் !!!
நண்பர் திரு. ரூபன் அவர்கள் நடத்திய தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டியில், இக்கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
http://2008rupan.wordpress.com/2013/11/13/ரூபனின்-தீபாவளிச்-சிறப்-2/