எண்ணும் எண்ணமெலாம்
என்றும் உயர்வாகவே இருக்கட்டும் !
உள்ளத்து சிந்தையெலாம்
சிறப்பானதாகவே இருக்கட்டும் !
இதயங்கள் என்றென்றும்
இன்பத்தில் திளைக்கட்டும் !
அன்பே எந்நாளும்
அகிலத்தை ஆளட்டும் !
நம்மைத் தாண்டிச் செல்லும்
நல்லாண்டுக்கு மனமாற
நன்றி சொல்லி
வழியனுப்புவோம் !
நம்மைத் தேடி வரும்
புத்தாண்டை இன்முகத்துடன்
வருக வருகவென
வரவேற்போம் !
வருக புத்தாண்டே ! வருக !
நிறைத்திடுக எம் மனதை
அன்பு அமைதி ஆனந்தத்தினால்
எந்நாளும் !
நண்பர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!