கண்ணாடி தனைப் பார்த்து
நீ சிரிக்க - உனைப் பார்த்து
நான் இரசிக்க - எனைக் கண்டதும்
கையை நீட்டியபடியே
அழகுப் புன்னகை உதிர்க்கிறாயே !
கண்ணாடி பிம்பம் தனையே
உனைப் போல் மற்றோர்
கிள்ளையெனக் கருதி - மெல்ல
கண்ணாடியை முன்னும் பின்னும்
திருப்பித் தான் பார்க்கிறாயே !
கலைத்துப் போட்டு விளையாடிய
செப்பை எல்லாம் - நீ
களைத்து உறங்கியதும் ஒழுங்காக்க
எழுந்ததும் முதல் வேலையாய்
கலைத்து தான் விடுகிறாயே !
காலை எழுந்ததும் என்
முகம் தேடும் - உன் ஆவல்
விழிதனைக் காணவே
நீயே உறக்கம் கலைந்து
எழும் வரை காத்திருக்கிறேன் !
உன் ஒவ்வோர் அசைவிலும் தான்
தளர்விலா முயற்சியை
கண்டு மகிழ்கிறேனே !
நீயே எந்தன் வாழ்வின்
ஒளியாக ஆனாயே !
என் பிள்ளைக் கனியமுதே !
பிள்ளைக் கனியமுதே ! - 1 பிள்ளைக் கனியமுதே ! - 2
பிள்ளைக் கனியமுதே ! - 3 பிள்ளைக் கனியமுதே ! - 4