Monday, September 28, 2015

நிம்மதி நிறை வாழ்வு




நாளும் சுழலும் உலகு தனில்
நில்லாது நகரும் வாழ்க்கை படகு
புயலோ தென்றலோ எதுவாக இருப்பினும்
செல்லும் வழியெலாம் நல் துணையாய்
அன்பே வாழ்வுதனை ஊழிக் கடல்மீது
இட்டுச் செல்லும் துடுப்பு


பேரன்பு நிறை உளமது ஆங்கே
பொறாமையுமே தானே தலையெ டுக்காதே
தன்னலம் தாண்டிய பொது நலத்துடனே
நற்பண்பும் நிறைந்து பரந்தே கிடக்குமே
நட்பும் உறவும் அக மகிழ்ந்தே
கூடி வந்து திளைக்குமே


அன்பும் பண்பும் நாளும் துணையாக
உள்ளத்தில் மலையென வளரும் நம்பிக்கை
நம்பிக்கை கொடுக்குமே ஊக்கமான தைரியம்
தைரியத்தில் பிறக்குமே உள்ளத் தெளிவு
இவை எல்லாம் அமைத்து கொடுக்கும்
வெற்றிக்கான மலர் பாதை


வெற்றியும் கண்ணை மறைக்காது கவனித்தாலே
வாழ்வில் நற்சுற்றமும் நிலையாய் இருக்குமே
நிறைவான வாழ்வதற்கு இவைதாம் ஆதாரமே
மனத்தில் பசுமரத்தாணியாய் இவையும் பதிந்தால்
நிம்மதி நிறை வாழ்வுமே எந்நாளும்
கைவசம் தான் ஆகிடுமே.
 


 மரபுக் கவிதை எழுத நான் எடுத்துக் கொண்ட சிறு முயற்சி. அவலோகிதம்
மென்பொருளின் உதவியுடன் இந்த கவிதையை எழுதியுள்ளேன். இப்பாடல் வெண்டுறை என்ற பாவகையை சார்ந்ததென்று அந்த மென்பொருளில் உள்ளிடுகையில் அறிந்தேன். பிழைகள் இருப்பின் அறிஞர் பெருமக்கள் சுட்டிக் காட்டுங்கள்.

நன்றி.

 உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி- இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்

14 comments :

  1. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. அன்புச் சகோதரிக்கு, வணக்கம்.
    தங்கள் படைப்பை நமது போட்டிக்குரிய தளத்தில் ஏற்றியிருக்கிறோம். மரபுக்கவிதை வரிசை எண்-26.
    பார்க்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html
    அன்புடன்,
    நா.முத்துநிலவன்,
    விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்.

    ReplyDelete
    Replies
    1. அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  3. அருமையான கவி படைப்பு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  4. நல்ல தமிழ்த்தறியில் நெய்தளித்த பாவகையும்
    வெல்ல மனப்பூர்வ வாழ்த்து.

    தங்களின் கவிதைகள் போட்டியில் வென்றிட வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோ.

      Delete
  5. அரும்மை அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  6. நல்ல கவிதை.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...