கரை தொட ஓடிவந்து விட்டு
காரணமின்றி பின்வாங்கி செல்லும்
அலைகளென - உள்ளமதில்
அலைமோதும் எண்ணங்களை
கொட்டிவிட எத்தனித்தாலும்
மெல்ல பின்வாங்கி அவை
மனத்தின் அடியாழத்தில்
ஒளிந்து கொண்டு
கண்ணாமூச்சி காட்டுகின்றனவே !
உறுத்தும் எண்ணங்களை
நினைவுகளை ஒதுக்கி தள்ளிவிட்டால்
ஆர்ப்பரிக்கும் அலைகளின் தாகம்
தீர்ந்துவிடுமெனில் - அவற்றை
தூக்கிச் சுமக்காது
கீழே இறக்கிவிட்டு தான் பார்ப்போமே !
நல்லதொரு கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteஉங்கள் தகவலுக்காக...
முகம் காட்டச் சொல்லாதீர் – கவிதைத் தொகுப்பு
http://venkatnagaraj.blogspot.com/2019/12/blog-post_2.html
உங்கள் கவிதைகளும் உண்டு!
மனமார்ந்த நன்றிகள் சகோதரரே. புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Deleteஅருமையான வரிகள் தமிழ்
ReplyDeleteமிக்க நன்றி தோழி.
Delete