வளைந்து நெளிந்தாடி
பாடி வரும் தென்றல் வழி
ஓடி வரும் இசையென
தெவிட்டா அமுதூற்றென
தேமதுரக் குரல் !!
தனிமையையும் உணரவில்லை
தவிப்பதுவும் தோன்றவில்லை
நினைத்த நொடிதனில்
இசை வெள்ளமென
செவிதனில் பாயும் குரல் !!
உடைந்து போன இசைத்தட்டாய்
ஒலிநாடாவில் இருந்த போதும்
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என
மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
அதே குரல் !!
கற்பனையாய் ஆனாலும்
கனவதனில் தொலைத்தாலும்
கடல் தாண்டி மலை தாண்டி நின்றாலும்
நினைவுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கும்
எங்கேயோ கேட்ட குரலாய் !!
அருமை....! வாழ்த்துக்கள்... தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...
ReplyDeleteதங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteதமிழ் மணம் வாக்கிற்கு நன்றிகள்.
சிறப்பான பகிர்வு .வாழ்த்துக்கள் இசை என்னும் இன்ப வெள்ளத்தில்
ReplyDeleteமனம் மகிழ்ந்திருக்க .
தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
Deleteஅருமை.தொடர வாழ்த்துக்கள்.இன்னும் எழுதுங்கள் இன்பத்தை காணுங்கள்
ReplyDeleteஅருமை... உண்மைதான் சில குரல்கள் அப்படிப் பட்டவைதான்...
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
Deleteஅருமை! அருமை!
ReplyDeleteஎங்கேயோ கேட்டதாயினும் இங்கேயும் இப்போதும்
உடனே உள்ளிருந்து கேட்கிறதல்லவா...
அதுவே அதன் சிறப்பு!
நல்ல கற்பனை! சிறந்த கவி நடை! ரசித்தேன் தோழி!
வாழ்த்துக்கள்!
த ம.3
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனது வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/09/blog-post_6.html?showComment=1378424615986#c2485677240117282867
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-