உன்னாலே ! உன்னாலே !!
விழி சுமந்த
கனவுகளெல்லாம்
விரிந்தது கண்முன்
நிஜங்களாய் !
விழி சொரிந்த
உவர்ப்பு நீரெல்லாம்
விழிகளும் புன்னகைக்க
உருண்டோடின ஆனந்தத் துளிகளாய் !
மௌனத்தையே தன்
மொழியென கொண்டிருந்த
உதடுகளும் விரிந்தன மெல்ல
புன்னகையை ஆடையென உடுத்தி !
விழி துயிலும் இரவுகளெலாம்
சுறுசுறுவென இயங்கும் பகலாய் !
ஆதவன் சிரிக்கும் பொழுதுகளோ
அசந்து கண்ணயரும் வேளைகளாய் !
மெத்தைகளும் பஞ்சனைகளும்
உனை எதிர்பார்த்தே உறக்கத்தில்
அசந்து போய்விட - உனக்கோ
அன்னையின் மடியே ஆனது தொட்டிலாய் !
மொத்தத்தில் உலகமே
உருமாறித் தான் போனது !
புது விதமாய்த் தான் விரிந்தது -
கண்மணிக் கிள்ளையே உன் வரவால் !
அற்புதமான கவிதை
ReplyDeleteஅந்தச் சுகம் அறிந்தவர்கள்
கூடுதலாக இந்தக் கவிதையை ரசிக்க முடியும்
நான் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
உண்மை தான் ஐயா. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deletetha.ma 1
ReplyDelete
Deleteதமிழ் மண வாக்கிற்கு நன்றிகள் ஐயா.
இனிமையான வரிகள் மனதிற்கு மகிழ்வைத் தந்தது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteசிறப்பான வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோ .
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி .
Deleteமிக அருமை தோழி...இனிமை சொல்லும் கவிதை..வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி .
Deleteஇனிமையான கவிதை.... பாராட்டுகள்.
ReplyDeleteத.ம. +1
தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !
Delete