காணும் புத்தகமெலாம்
உன் அறிவுப் பசிக்கு
அமுதூட்டும் அட்சய
கலையமானதே !
புத்தகங்களை எல்லாம்
நீயே கிழித்து விட்ட போதும்
அவற்றை ஒருங்கிணைத்து நீ
ஓர் நாளும் படிக்க மறந்ததிலையே !
நீ எழுதுகோல் பற்றி
எழுதிய கோட்டுச்
சித்திரமெலாம் எனக்கு
பொக்கிஷமானதே !
குளிர்சாதனப் பெட்டி
சுவர் - தொலைக்காட்சி கணினி
அனைத்திலும் உன்
எழிலார்ந்த கைவண்ணங்களே !
நீ உதிர்க்கும் வார்த்தைகளுக்கு
பொருள் விளங்காது போயினும்
என் இதய பேழையில்
பொக்கிஷமென பாதுகாக்கிறேன் !
என் செல்லக் கண்மணியே !
பிள்ளைக் கனியமுதே ! - 1
பிள்ளைக் கனியமுதே ! - 2
மட்டற்ற மகிழ்வினை அள்ளிக் கொடுக்க இவர்களை விட இறைவனாலும் முடியாது !குழந்தை நிலவின் மறு பிறப்பு .என்றென்றும் இந்த மழலைகள் மகிழ்ந்திருக்க வாழ்த்தி வணங்குவோம் .அருமையான படைப்பிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.
Deleteஇனிமையான வரிகள் மனதை பரவசப்படுத்தியது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteமிகவும் அருமையான உணர்வுகளைச் சொல்லும் அருமையான கவிதை
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி.
Deleteஅருமை.....
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே !
Delete