நீ செய்யும் சிறுசிறு
உதவிகளில் எல்லாம்
சொக்கிப் போய் தான்
நிற்கிறேன் !
நற்காரியத்திற்கு கைதட்டலுடன்
ஊக்கம் சேர்க்கும் உன்
அழகு குணம் தனை
மெச்சுகிறேன் !
உறங்கும் போது நீ
உதிர்க்கும் சிறு முறுவலை
கண் இமையாது தான்
காண விழைகிறேன் !
என் கண்ணே பட்டு விட்டால்
என்ன செய்வேனென்றே
சடாரென பார்வையை
திருப்பிக் கொள்கிறேன் !
என் மனநிலை அறிய
முகம் நோக்கும் உன்
குறுகுறு விழி கண்டு
எனை மறந்து சிரிக்கிறேன் !
உன் புன்னகையில்
உலகையே மறந்து நிற்கிறேன் !
உன்னிலே எனை தொலைத்துவிட்டு
உன்னிலேயே எனை தேடுகிறேன் !
என் கண்ணான கனியமுதே !
பிள்ளைக் கனியமுதே ! - 1
பிள்ளைக் கனியமுதே ! - 2
பிள்ளைக் கனியமுதே ! - 3
தொடர்ந்து பதிவிடும் பிள்ளைக் கனியமுதின் எல்லா கவிதையும் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள்.
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள் சகோதரரே !
Delete