சுட்டிக் கிள்ளையின் செல்லக் குறும்புகள்
கிண்ணமதில் அன்னம்
ஏந்தி - உன் பவழ வாயில்
நான் ஊட்ட -மெல்ல
விரல் கடித்து சிரிப்பாயே !
அன்னமும் வெஞ்சனமும்
உன் பிஞ்சுக் விரல்களை
வண்ண மயமாக்கிட - தரையில்
எழுதிடுவாய் எழில் ஓவியம் !
அங்கீ .... அங்கீ ..... என்று மழலை பேச்சுடன்
குப்புற விழுந்து - மெல்ல தலைதூக்கி
நீ சிரிக்க - கள்ளமிலா சிரிப்பதில்
கொள்ளை போகுதே எம் உள்ளமே !
தரையில் பரபரவென நீந்தியே
கட்டிலுக்கடியில் ஒளிந்து கொண்டு
மெல்ல எட்டிப் பார்த்து நீ உதிர்க்கும்
புன்னகைக்கு தான் விலை மதிப்பில்லையே !
நீ கண்களை இரு கரங்கொண்டு
மூடிக் கொள்ள - நான் "பிடிச்சா "
சொல்லிச் சிரிக்க - என் கண்களை
உன் பிஞ்சுக் கரங்களால் மறைத்திடுவாயே !
கண் மறைத்த சற்று நேரத்திற்கெலாம்
கைகளை விலக்கிப் பார்த்து
கலகலவென முன்னெட்டுப் பற்கள் தெரிய
சிரித்து உலகையே மறக்கச் செய்திடுவாயே !
உன் செல்லக் குறும்புகளெலாம்
கட்டிக் கரும்புகளாக இனிக்கின்றனவே !
உனை என் மகவாய் ஈன்றிட
என்ன தவம் செய்தேனோ !
உன்னால் பிறவிப் பயன்
அடைந்தேனே ! - என் வாழ்வும்
இன்று முழுமை அடைந்ததே
உன்னாலே - என் கண்மனியே !
பிள்ளைக் கனியமுதே ! - 1
கண்ணை மூடிக் கொண்டு அப்படியே குழந்தைப் பருவத்திற்கு இட்டுச்
ReplyDeleteசென்ற கவிதை வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா !
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.
Deleteஒவ்வொரு வரியும் ரசனை... பாராட்டுக்கள்...
ReplyDeleteதங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteஅருமையான கவிதை.....
ReplyDeleteமழ்லையைப் பிடிப்பது போலவே உங்கள் கவிதையும் பிடித்தது...
தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே !
Deleteமற்றொரு தாலாட்டு !
ReplyDeleteஅருமை தோழி!
தங்களது அன்பான ஊக்கமூட்டும் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள் தோழி.
Deleteதாய்மையை அழகாக உரைத்து உணரவைக்கும் வரிகள்..மிக மிக அருமை..தாயான ஒவ்வொருவரும் உணர முடியும்..வாழ்த்துக்கள் தோழி.
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.
Deleteஇதை அப்டியே என் பேரனுக்குப் போடலாம்.
ReplyDeleteஇப்ப ஒழிவது அவர் விளையாட்டு. ''கண்டிட்டேன்''
என்றால் விழுந்து விழுந்து சிரிப்பார்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே .
Delete