அறியாமை இருளகற்ற
ஞானப் பால் கொடுக்கும்
உமையவள் என அவளிருந்தாள்!!
நீயோ - அவள்
உயிர் குடிக்கும் காலனாய்
அவளைச் சுற்றியிருக்கிறாய்!!
அவள் உன் மீது கொண்ட
அக்கறை - தாய் தான்
சேய் மீது கொண்டது....
உனக்கோ அது வேம்பென கசக்க
எத்தனையோ பேரை தன்
நிழலில் அரவணைத்து - அவர்தம்
வாழ்வில் உயர தூண்டுகோலாய்
நின்றவரை - இன்று
தன் சேய்களின் பிஞ்சுப்
பாதங்களை மறந்து
இறைவனவன் பாதங்களில்
தஞ்சம் புறச் செய்துவிட்டாயே -
பிஞ்சினில் நஞ்சு சுமந்த மாணவனே!!!