Tuesday, December 27, 2011

வார்த்தையிலிருந்து கவிதை வடி-17(மவுனம் , பயிற்சி , கவிதை )

வார்த்தையிலிருந்து கவிதை வடி-17
வார்த்தைகள்:மவுனம் , பயிற்சி , கவிதை

மலரே....உன்னைக் கண்டு
ஆச்சர்யத்தில் ஆழ்ந்து 
கொண்டிருக்கிறேன்....
மவுனமாய் இதழ் சிரிப்பினை
உதிர்த்து....எங்கனம் கவிதையாய்
புதுப்பிறவி பெறுகிறாய் என்று!!!
புத்துணர்வூட்டும் கலையில்
என் ஆசானாய் மாறி -
எனக்கு பயிற்சி அளிப்பாயோ??

http://www.eegarai.net/t75698p285-topic#702536

Friday, December 23, 2011

கவித்துவமான புகைப்படங்கள் - 2

கரையில் நிற்கும்
மரத்தின் பிம்பம்
நதியின் முகத்தில்....
என் மனதிருக்கும்
துன்ப அலைகள்
எவர் அறிவரோ??

வெண்பனி தோழனை
வரவேற்று கட்டித் தழுவ
மரமும் தயாராய்
நிற்கிறதோ??

 மழையின் தண்மையில்
துள்ளியாடி களைப்பு
மேலிட்டதோ??
காளான் குடைக்கடியில்
ஓய்வாக ஒதுங்கியுள்ளதே-
தத்தித் தாவும் தவளை.

பஞ்சுக் குவியலென
பிஞ்சுக் குழந்தையின்
பாதம் - தந்தையின்
கைதனில் புத்தம்
புதியதோர் உலகம்!!
விழி மீன்களுக்கு
இங்கு தூண்டிலிட்டவரும்
எவரோ?? மீன்களின்
அழகதில் மயங்கி
தூண்டிலே இங்கு
வளைந்து நிற்கின்றனவே-
புருவங்களாக!!!

வெற்றி வானும்
தொட்டு விடும்
தூரம் தான்.....
வாழ்க்கைப் பாதையில்
முயற்சிப் பாதம் வைத்து
நடந்தால்!!

கண்ணாடிக் குடுவையும்
சருகில் தன் அழகிய
முகம் பார்த்து மகிழ்கிறது-
ஆதவனின் ஒளியில்!!!
மதுக் கிண்ணமும்
மதுவின் மயக்கத்தால்
மதி மயங்கி நிற்கிறதோ??
உள்ளத்து சோகங்கள்
ஆர்ப்பரிப்புகளுக்கு ஓர்
வடிகால் - அமைதியான
இயற்கையதன் மடிதனில்!!!
http://www.eegarai.net/t76873p15-topic#700186

ஆழிப் பேரலை நினைவாக

பொங்கிவரும் அலையது
கரைவந்ததும் சிறு
கிள்ளை என கால் தழுவி -
நின்றால் உள்ளமதில்
பொங்கும் மகிழ்வு -
ஏனோ இன்றில்லை...
சோகமும் பயமுமே
மனதை பிசைகின்றன....
அந்த நாள் மட்டும்
ஏன் உனக்கு அப்படியோர்
அகோரப் பசியோ??
உன் கரையதில்
ஆடி விளையாடி
களித்திட்டோர் எத்தனையோ...
இன்று உன்னால்
கண்ணீர் சிந்துவோரும்
எத்தனையோ....
நீயும் தான் ஆக்கிவிட்டாய்
திசம்பர் 26ஐ .......எண்ணினாலே
குலைநடுங்கும் நாளாய்-
அனைவரது மனதிலும்!!!
http://www.vaarppu.com/padam_varikal.php?id=1 

Tuesday, December 20, 2011

ஆகாயப் பந்தல்


ஆகாய வீதிதனில்
மரப் பந்தலிட்டு
நிலா தரையில்
மேக மணல் பரப்பி
பந்தலதில் ஊஞ்சலும்
கட்டி - ஆடிடும் ஓர்
ஆனந்தக் கனவு-
என்றும் மனதில்
நீங்காததோர் நினைவாக!!!

Monday, December 19, 2011

கவித்துவமான புகைப்படங்கள்

விழிகளின் ஓரம்
ஏனிந்த கார்காலம்?
சோக மேகங்கள்
சூழ்ந்திட்டதாலா?? அன்றி
ஆனந்த அருவி
பெருக்கிட்டதாலா??

 நொடிப்பொழுதில்
முத்துக்களென சிதறும்
நீர்த்திவலைகள்....
கண்கள் படம்பிடிப்பதற்க்குள்
நிழற்படமாய் மனமும் கையும்
படம்பிடித்து விட்டனவே !!!
சில்வண்டே......என்ன சிந்தனையோ??
சிவ்வென்று காற்றைக் கிழித்து 
பறக்க எத்தனிக்கிறாயோ?? அன்றி 
இரையதை தேடி...மலரின் விளிம்பதில்
தவமிருக்கிறாயோ??தாயின் அரவணைப்பதில் தான்
வாழ்ந்திட்டால் - கடந்திடலாமே
எத்துனை தடைகளையும் எளிதாக!!!
அவளது அன்பின் கதகதப்பில்
தட்டிடலாமே வெற்றிவானின்
கதவுகளை நம்பிக்"கை" கொண்டு!!
வாழ்வின் ஒவ்வொரு நாளும்
மலர்கிறது - புத்தம் புதிய
விடியலோடு.....
வரவேற்போம் வசந்தமான
நாட்களை - நம்பிக்கை
மலர்களோடு!!!Sunday, December 18, 2011

தமக்கு வரும்வரை.........

சக தோழனின் துடிப்பு...
கண்களில் பயமாக
சிலருக்கு .....
கேலியும் கிண்டலுமாய்
சிலருக்கு...
இவையனைத்தும்
தமக்கு வரும்வரை தாம்!!

வார்த்தையிலிருந்து கவிதை வடி - 16( மெய் , மீசை , குழி )

வார்த்தையிலிருந்து கவிதை வடி......
வார்த்தைகள் :மெய் , மீசை , குழி

பிள்ளையின் குற்றம் கண்டு
தந்தையின் மெய்யுமது விரைப்பாகி
மீசையும் கோபத்தில் துடிதுடிக்க
கையும் பரபரவென்று அடிக்க ஒங்க...
நெஞ்சுக்குழிதனில் எங்கோ
பாசம் வந்து கையை கட்டி விடுகிறது!!!

http://www.eegarai.net/t75698p270-topic#696344

Saturday, December 17, 2011

கண்ணீர்

கயலென கருவிழியிரண்டும்
கண் குளமதில் துள்ளி ஆட
கயலுக்கு தூண்டிலிட்டதும்
யாரோ???
கண் குளமது
கலங்கி நிற்கிறதே!!!

link

Friday, December 16, 2011

முடிந்துபோன பாதை

இது என்ன
முடிந்து போன
பாதையா?? அன்றி
மக்களின் அறியாமையால்
அதிகாரிகளின் அலட்சியத்தால்
முடித்து வைக்கப்பட்ட பாதையா?
இணை கோடுகளாய் நீர் அது
சென்றுகொண்டிருக்க.......
இடைவெளியை ஏற்படுத்தி
விட்டது - மக்களின்
உறவுகளுக்கு இடையில்!!!
மக்கள் மனது வைத்தால்
சீராகாதோ பாதையும் 
தொடர்ந்திடாதோ-  உள்ளத்து உறவுகளும் ???

http://www.vaarppu.com/padam_varikal.php?id=56 

காதல் போயின்...

காதல் போயின் ???
காதல் போயின்
என்னவாகும்??
ஒன்றும் ஆகப்போவதில்லை.....
ஆம்!! ஒன்றும் ஆகப்போவதில்லை!!
உடனே புதிதாய்
மற்றொரு காதல்
மலர்ந்து விடுகிறது....
ஏனெனில் - ஏதோ
ஒரு எதிர்பார்ப்புகளுடன் தானே
இன்றைய காதல்கள் மலர்கின்றன???

http://www.vaarppu.com/padam_varikal.php?id=67 

வார்த்தையிலிருந்து வடி - 15(இலகு ,திரை ,சணல்)

வார்த்தையிலிருந்து வடி - 15
வார்த்தைகள் : இலகு ,திரை ,சணல்

அறிவுத் தெளிவது
உதித்ததும் -அறியாமை
எனும் மாயத் திரை
ல் கொண்டு
கட்டியது போல்
இலகுவாய் அறுந்து
விழுந்ததுவே !!!

 இரும்புத் திரை கொண்டு
மறைத்தாலும் -
இதயத்துக் காதல்
ல்   சாக்கதில் உள்ள
ஓட்டை போல்
கண்கள் வழியாக
இலகுவாய்
வெளிப்பட்டு விடுகிறதே!!!

http://www.eegarai.net/t75698p255-topic#695095


போதும்...போதும்...போதும்

தன் நிலை மறந்து
பிறரை பொல்லாங்கு
சொல்லுவோரின்
வார்த்தைகள்.......
முகத்திற்கு முன்
தேனொழுகும் வார்த்தைகள்
முதுகுக்குப் பின்
கேட்கக் கூசும் சொற்கள் ........
தனக்குத் தான்
பேசும் அதிகாரம்
என்ற ஆணவத்தில்
வளைந்தாடும் நாக்கின்
விஷக் கணைகள்......
இவையனைத்தையும் கேட்டு
காதும் தான் அலறிற்று -
போதும்.....போதும்.....போதும்........
வார்த்தைகளைக் கொட்டிவிடுவது
என்னவோ - சுலபம் தான் !!!
ஆனால் - அதனை
அள்ளுவதென்பது ????
http://www.vaarppu.com/padam_varikal.php?id=3கடிகாரம்

இரு கைகொண்டு
உலகையே
கட்டி ஆளும்
சக்ரவர்த்திகள் !!!
நம் வாழ்வின்
பயணமென்பது-
முன்னோக்கியே
இருக்க வேண்டுமன்றி
பின்னோக்கி அல்ல
என்ற உயர் தத்துவத்தை
உணர்த்திக் கொண்டே
இருக்கும் செயல் வீரர்கள் !!!
வாழ்வதில் எத்தடை வரினும்
நாம் கொண்ட
லட்சியப் பயணத்தில்
முன்னேறிக் கொண்டே
இருக்க வேண்டுமென்பதை
உணர்த்தும் ஆசான்கள் !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=20

Thursday, December 15, 2011

வார்த்தையிலிருந்து வடி - 14(பசி , முல்லை , காகிதம் )

வார்த்தையிலிருந்து வடி - 14
வார்த்தைகள் : பசி , முல்லை , காகிதம்


 முல்லை மலர் ஒத்த
உன் முகம் கண்டதும்
என் பேனாவிற்கும்
இலக்கியப் பசி
வந்துவிட்டதா என்ன ??
கவிதையில் உன்னை
வடித்திட காகிதம்
தேடுகிறதே??

http://www.eegarai.net/t75698p240-topic#694364 

Wednesday, December 14, 2011

ஏமாற்றம்

தேடல்கள் மற்றும்
எதிர்பார்ப்புகளின் 
எல்லைகள் பறந்து
விரியும் போது
ஏமாற்றம் என்பது
மனதில் பிறக்கும்
அநியாய ஆசைகளுக்கும்
பேராசைக்கும் ஓர்
தடைக்கல்லாய் அமைகிறது !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=70 

2011 விட்டுச்சென்ற...


2012 என்றில்லை...
எல்லா ஆண்டுகளும்
நம்முள் ஏதோ ஓர்
புதிய உந்து சக்தியை
ஏற்படுத்தத்தான் செய்கின்றன !!!
நாம் கடந்து வந்த
ஆண்டுகளில் - வசந்தங்களும்
புயலும் மாறி மாறி
வந்து கொண்டே தான் இருந்தன...
இனியும் அவ்வாறே இருக்கும்..
ஏனெனில்....இன்பமும் துன்பமும்
கலந்ததன்றோ வாழ்க்கை ????
2011 நம்முள் விட்டுச் சென்ற
இன்பங்களை - என்றும் அழியா
நினைவுகளில் கொள்வோம் !!!
துன்பங்களை தோல்விகளை
பாடங்களாய் அனுபவங்களாய்
மனதில் கொள்வோம் !!!
வரவேற்போம் எதிர் வரும்
புத்தாண்டை புன்னகையோடு !!!
புதிய நம்பிக்கையோடு !!!
நம்புவோம் - புத்தாண்டு
கொண்டு வரும்
அனைவரது வாழ்விலும்
வசந்தங்கள் பலவென்று  !!!
வேண்டுவோம் - புத்தாண்டு
அனைவரது உள்ளத்து நீண்டநாள்
கனவுகள் ஆசைகளை
நிறைவேற்ற வேண்டுமென்று !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=78 

வார்த்தையிலிருந்து கவிதை வடி - 13(பகை, மேகம்,கலை )

வார்த்தையிலிருந்து கவிதை வடி......
வார்த்தைகள் :பகை, மேகம்,கலை

உள்ளமதில்
திரண்டெழும்  பகை
மேகமதை கலைத்தாலே
தெரியுமே - உறவு வானம்
தெளிவாக !!!
 http://www.eegarai.net/t75698p210-topic

Tuesday, December 13, 2011

எண்ணப் பிரதிகள்

மனிதனின்
மன எண்ணங்களை
பிரதியெடுக்கும் அளவிற்கு
தொழில்நுட்பம்
வளர்ந்துவிட்டதா என்ன ??
ஒரு தனி மனிதனது
எண்ணங்களில்
உதித்த கவிதைகள்
அச்சில் வார்த்தது போல்
சிறு மாற்றம் கூட இல்லாது
வெவ்வேறு கவிஞர்களின்
பெயர்களில்
இணையத்தில் விரவிக்
கிடக்கின்றனவே !!!

ஒருவரது எண்ணமதில்
உதிக்கும் கவிதை
ஒரு பெண்ணின்
கருப்பையில் உதிக்கும்
கருவைப் போன்றது.....
கருவைத் திருடும்
கயவர்களே......
உங்களுக்கு என்ன
தண்டனை
கொடுத்தால் தகும்??

http://eluthu.com/kavithai/50054.html 

வார்த்தையிலிருந்து கவிதை வடி - 12(நாடு, பிரம்பு, கருங்கல் )

வார்த்தையிலிருந்து கவிதை வடி......
வார்த்தைகள் :நாடு, பிரம்பு, கருங்கல்

நாட்டின் நலனதை
நாடினால் தான்
தமக்கு வாழ்வென்பதை மறந்த
கருங்கல் இதயங்களுக்கு
எந்தப் பிரம்பால் அடித்து
புரிய வைப்பது ???

http://www.eegarai.net/t75698p195-topic#692916

Monday, December 12, 2011

குடை

அலை மோதும்
கடலின் கரையதில்
உள்ளங்கள் மோதிக்
கொண்டதோ??
மோதலின் அடையாளமாய்
குடையும் நிலைகுலைந்து
நிற்கிறதே?????

http://www.vaarppu.com/padam_varikal.php?id=18 

Sunday, December 11, 2011

விடுமுறை நாளொன்றில்........


இயற்கையிலோர்
அற்புத நிகழ்வு -
அலைகடலும் செவ்வானமும்
மாலைப் பொழுதில்
ஓய்வாய் கைகோர்த்து
நடை பழகுகின்றனவே .......
வானவில்லுக்கும் இன்று
விடுமுறை நாளோ?
கடற்கரையில்
ஓய்வெடுக்க வந்துள்ளதே !!!
http://www.vaarppu.com/padam_varikal.php?id=75 

வார்த்தையிலிருந்து கவிதை வடி-11(அழுக்கு,முயற்சி, கயிறு )

வார்த்தையிலிருந்து கவிதை வடி-11 
வார்த்தைகள் : அழுக்கு,முயற்சி, கயிறு

அறியாமை அழுக்கது
மனக் கிணற்றில்
மண்டிக் கிடக்குது.....
அனுபவக் கயிறு கொண்டு
உள்ளத்துக் குப்பையதை
தூர்வாரிட முயலலாமே??

http://www.eegarai.net/t75698p180-topic#691213

வார்த்தையிலிருந்து கவிதை வடி-10(வழக்கு , அணை , தலை )

வார்த்தையிலிருந்து கவிதை வடி........
வார்த்தைகள் : தலை,அணை,வழக்கு


தலை நரைத்து -
உடல் நலிந்த வேளையிலே
உள்ளத்து அன்பதனை அணை யிட்டு
உனக்காக நான் தேக்கிட
என் பிள்ளையே - நீயோ
வழக்கிட்டு செல்வமதை
பறித்திட முனைதல் சரியோ??

http://www.eegarai.net/t75698p150-topic

Friday, December 9, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-9(சிலை , தென்றல் , பூச்சி )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள்-சிலை , தென்றல் , பூச்சி

தென்றலாய் காற்றது
தாண்டிச் சென்றாலும்
வெயில் மழை என
எக்காலத்தும்
உலக உயிர்களை - அது
சிறு பூச்சியாயினும்
இடமளித்து காத்து
நிற்கிறார் - சிலையாய்
அரசமரத்தடி பிள்ளையார் !!!

http://www.eegarai.net/t75698p135-topic#689639

Wednesday, December 7, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-8 (கடல்,சிகப்பு,கணக்கு )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள்-கடல் ,சிகப்பு ,கணக்கு 

வானும்  கடலும் 
ஒன்றானதோ -
எனுமளவுக்கு சூரியனவன்
தன் ஒளியால்
வான வீதியையும்
அலைமோதும் கடலதையும்
சிகப்பாக்கிய அழகில்
மனது லயிதிருந்தாலும் -
என் காதலியே...
மனமது நீ வரும் நேரமதை
கணக்கிட்டுக் கொண்டிருந்தது!!!

http://www.eegarai.net/t75698p120-topic#688169

Tuesday, December 6, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-7 (சோறு , கோல் , பாறை )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் - சோறு , கோல் , பாறை


அன்னையவளும் தன்
கிள்ளைக்கு சோற்றை...
கையில்   கொண்டு 
ஊட்டுகிறாள் 
பாறை போன்ற 
அசையா நம்பிக்கையும் 
உடன் குழைத்து .....
கிள்ளையாய்  தவழும் போதே 
அடித்தளமாய்   -
பிள்ளை வெற்றிக் கோலேந்தி
உலகை வலம் வர!!! 


http://www.eegarai.net/t75698p90-topic#687383

Monday, December 5, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-6(இதயம் , களிமண் ,செருப்பு )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -இதயம் , களிமண் ,செருப்பு 

செருப்பு வாரி இறைக்கும்
சேற்றைப் போல்
கொட்டிவிடாதே- உன்
கோபக் கனல் தெறிக்கும்
வார்த்தைகளை!!
ஏனெனில் - இதயமது
களிமண்ணில் செய்யப் பட்ட
மண்பாண்டம் போன்றது.
உடைந்தால் ஒட்ட வைப்பது
எளிதன்று!!!


http://www.eegarai.net/t75698p75-topic#686530

Sunday, December 4, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-5(பெண் , சிலுவை , கடிகாரம் )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -பெண் , சிலுவை , கடிகாரம் 

பொறுப்புச் சிலுவையை 
சுமையாய் கொள்ளாது
சுகமாய் எண்ணி 
கடிகாரமென -
நொடிப் பொழுதும் 
நில்லாது - தனது
பொறுப்புணர்ந்து 
தனது வாழ் நாளெல்லாம்
ஓடிக் கொண்டிருக்கிறாள் -
பெண்!!! 

http://www.eegarai.net/t75698p45-topic#686025 

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-4(விலங்கு , புறா , கொடி.)

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -விலங்கு , புறா , கொடி.


விலங்கென மாறி 
தன்னிலை மறந்து
தடுமாறும் நேரமதில் 
உள்ளமதில் வன்மம் கூடி 
வெறுப்புமது நெஞ்சில் 
கொடியாய் படர 
அறியாமை இருளும்
கண்களை மறைக்க 
அன்பின் வடிவாய் 
தியாகச் சின்னமாம் 
வெண் புறாவாய்
சமாதானம் இணைக்குமே
உலகத்து உறவுகளை 
அன்பு  கொண்டு!!!

http://www.eegarai.net/t75698p45-topic#686023

 

Friday, December 2, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-3(முடி , கதவு , வெளிச்சம்)

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -முடி , கதவு , வெளிச்சம் .

 முகிலென மங்கையவள்
முடியும் அலைபாய
வான வீதியில்
உலாவந்த சந்திரன்
சாளரக் கதவருகே
வெளிச்சம் பரப்பி
வானத்து முகிலது
மனையினுள் சென்றதோ
என்றெண்ணி.....
தனைமறந்து நிற்கின்றான்.....

http://www.eegarai.net/t75698p30-topic#685281 

Thursday, December 1, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-2 (குரங்கு,கண்ணாடி,மணி )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் - குரங்கு , கண்ணாடி , மணி (பெல்)

 மானுடா.......
ஆறறிவு கொண்ட
உனக்கிருக்க வேண்டிய
சிந்தனையையும் செயல்திறனையும்
கண்ணாடியென பிரதிபலிக்குது பார்.....
ஐந்தறிவு கொண்ட குரங்கு!!!
அது அடிக்கிறது - உன்
அறியாமைக்கும் அலட்சியப் போக்கிற்கும்
ஆராய்ச்சி மணி!
விழித்துக் கொள் மானிடா....
உன் அறியாமை உறக்கத்தினின்று!
உன் அலட்சிய மயக்கத்திலிருந்து!!
http://www.eegarai.net/t75698p15-topic

Related Posts Plugin for WordPress, Blogger...