தனக்குத்தானே வேலியிட்டு
அடைந்து கொண்டிருக்கும்
மனம் - பல நாட்கள்
இடமொன்று கதவடைத்து
போடப்பட்ட பூட்டிற்குச் சமம் .....
கதவு திறந்தால்
வெளிச்சம் கிடைக்கும்....
மனம் திறந்தால்
தெளிவு பிறக்கும்...
உள்ளமதில் வழிந்தோடும்
எண்ண அலைகளுக்கு
வார்த்தைகளால் வடிவம்
கொடுத்து - இசை கொண்டு
மெருகேற்றி
காற்றில் கலந்து வரும் கானமென
வானொலிப் பெட்டியும்
இசைத்திட - ஆசை
ஊஞ்சலதில் பருவமும்
அசைந்தாட - மையலில்
மயங்கிச் சிரிக்கிறாள்
இளமாது!!!
விதையாய் பூமிதனில்
விழுந்து-மண்ணை தன்
வேர்களால் இறுகப் பற்றி
நிமிர்ந்து நின்று.....
ஆதவனின் ஒளி கண்டு
முகம் மலர்ந்து.....
காற்றின் இசைக்கேற்ப
தலையசைத்து .......
பருவத்தே பயனளித்து
தன் கடனாற்றும்
உன்னதப் பிறவிகள் - தாவரங்கள்!!! http://pullaankulal.blogspot.com/2011/11/5.html#comment-form
மழைக்கு கறுப்புக்
குடைதனை
கொடியாகக் காட்டி
புறக்கணிப்போர் மத்தியிலே
இங்கே நடக்கிறது-
மழைத் தாய்க்கு ....
நாட்டியாஞ்சலி வரவேற்பு!!!
மனம் குளிர்ந்த அன்னையவள்
வந்து விட்டாள்......
தன் பூமிக் கிள்ளையைத் தேடி!!!
மகிழ்ந்திருப்போம்-
அன்னையின் தன்மையில் ........
என்றும் மறவாதிருப்போம்-
மழை தரும் மரங்களை
வளர்க்க வேண்டுமென்பதை !!! http://pullaankulal.blogspot.com/2011/11/6.html#comment-form
கடற்கரை மணலில்
பதியும் காலடிச் சுவடு போன்றது-
மனித வாழ்வு.
அடுத்தடுத்து வரும் அலைகள்
கரையை தழுவிச் செல்லும் போது
நிலை மாறுவது போல்
மனித வாழ்வும் நிலையற்றது......
வாழும் நாளில்
தன்னலம் பேணாது
பொதுநலம் மனதில் கொண்டு
பதித்திடுவோம் நமது சுவடை
உலக ஏட்டினிலே!!!