Monday, October 5, 2020

ஜன்னல் வானம்


ஜன்னல் திரைச்சீலைகள்

மெல்லக் கையசைத்து

எனையழைத்தே சிரிக்க

நானும் அன்போடதன் 

கரம்பற்றி நிற்கின்றேன் !

அகன்று திறந்திருந்த

ஜன்னற்கதவு வழியே

வானம் வீட்டினுள் எட்டிப் பார்க்க

அங்கே - கம்பிச் சட்டங்கள்

சிறைக் கம்பிகளாய் - எனையும்

நீண்டநெடு வானந்தனையும்

விலக்கி வைக்க

ஏக்கப் பெருமூச்சோடே

ஓடும் மேகங்களை என்

பார்வையால் துரத்த

எட்டாத் தொலைவில்

மேகமுமே மறைய

ஜன்னலை விட்டோடி வந்தே

பரந்த நீலவானைப் பார்க்க

விட்டு விடுதலையானது -

எண்ணங்களும் வான் வண்ணங்களும்!

Sunday, April 26, 2020

கிண்டில் புத்தகங்கள்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். அமேசான் கிண்டிலில் முதல் முயற்சியாக சில சிறார் கதை புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். இப் புத்தகங்கள் அண்ணா நினைவு சிறார் கதைப் போட்டிக்காக எழுதப்பட்டது. Kindle Unlimited இருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  வாசித்து, உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள், மற்றும் அமேசானில் எழுதும் reviews, போட்டியின் முதல் சுற்றில் தேர்வாக உதவும்.










நன்றி.

Wednesday, April 15, 2020

மகள்

உள்ளத்தாலும் உணர்வினாலும்  
உன்னில் என்னைக் கண்டே     
என்னில் உன்னை நிறைத்தே                       
நாளெலாம் கடக்கிறேன் !
காலத்திற்கும் சிநேகிதியாய்
கதைகள் பேசி இலயித்திருக்க
ஏற்றம் தாழ்வு எதுவரினும்
தோள் கொடுக்கும் தோழியாய்
கண்மணி உனக்கு நானிருப்பேன்
எந்தன் மடியில் முகிழ்த்த நல்முத்தே !

இக்கவிதை அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாசிக்கப்பட்டது.

வாசிக்கப்பட்ட கவிதைகள் அனைத்தும், youtube வீடியோவாக உள்ளது.

https://youtu.be/2Shsuo1NxyI

நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்


திராவிட வாசகர் வட்டம் நடத்தும், பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020 க்கு நான் எழுதிய 5 சிறுகதைகள்.அமேசான் கிண்டிலில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். Kindle Unlimited வைத்திருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://www.amazon.in/dp/B08669MCPX/ - கூட்டு வாழ்வு
https://www.amazon.in/dp/B086CY2MQ9/ - கும்பி கற்ற பாடம்

இவ்விரு நூல்களும் இப்போது, free promotion ல் உள்ளது. நண்பர்கள் வாசித்து, review எழுதினால், போட்டியின் அடுத்த நிலைக்கு செல்ல உதவியாக இருக்கும். போட்டியின்  அடுத்த நிலைக்கு செல்ல 10 review க்கள் தேவைப்படுகிறது. இயன்ற நண்பர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

https://www.amazon.in/dp/B08721CK7J/ - பென்குவினின் கதை
https://www.amazon.in/dp/B085DNRVZX/ - பிளாஸ்டிக்கில் இருந்து விடுபடுவது எப்படி?https://www.amazon.in/dp/B085VK46SX/
பூச்சிகளும் பூச்சிகளை உண்ணும் செடிகளும்

அனைத்து நூல்களையும் Kindle unlimited வைத்திருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களும், amazon reviews ம், புத்தகம் முதற்கட்டத் தேர்வில் இடம்பெற உதவும்.

உதவும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.









Sunday, February 16, 2020

உண்மை உயிர்த்தெழும் நாள்.



மெளனம் சொன்ன சாட்சியங்கள்
அதனதன் வசதிக்கேற்ப உருப்பெற்று
தலையும் தெரியாது வாலும் புரியாது
அறியாமை ஆற்றாமை போதயேறி ஆட
சிலுவையில் ஆணி கொண்டு
அறையப்பட்ட நிலையில்
உண்மையும் அன்பும் தான்
உயிர்த்தெழும் நன்னாளும் எந்நாளோ !

Sunday, January 12, 2020

அலைகளின் தாகம்



கரை தொட ஓடிவந்து விட்டு
காரணமின்றி  பின்வாங்கி செல்லும்
அலைகளென  - உள்ளமதில்
அலைமோதும் எண்ணங்களை
கொட்டிவிட எத்தனித்தாலும்
மெல்ல பின்வாங்கி அவை
மனத்தின் அடியாழத்தில்
ஒளிந்து கொண்டு
கண்ணாமூச்சி காட்டுகின்றனவே !

உறுத்தும் எண்ணங்களை
நினைவுகளை ஒதுக்கி தள்ளிவிட்டால்
ஆர்ப்பரிக்கும் அலைகளின் தாகம்
தீர்ந்துவிடுமெனில் - அவற்றை
தூக்கிச் சுமக்காது
கீழே இறக்கிவிட்டு தான் பார்ப்போமே !

Sunday, October 13, 2019

சாம்பலாய் முடியும் உடல்



உடலும் நமதில்லை - அதில்
துடித்திருக்கும் உயிரும் நமதில்லை!
கூடு விட்டு ஆவி போன நொடி
நம் பெயரும் கூட நமதில்லை !
அடுத்த நொடியும் நிலையில்லை - இங்கு
கோபமும் வெறுப்பையும் மட்டும்
நிலையாக்கிக் கொண்டு
கிடைக்கும் சந்தர்ப்பத்திலெலாம்
நஞ்சினை உமிழ்ந்தபடி
உதாசீனப்படுத்தியபடியே வாழ்க்கை எனும்
பயணம்தனில் ஓடிக்கொண்டிருந்தால்
எதிர்க்காற்றில் நம் நஞ்சே
முகத்தில் அறைய
மூச்சடைத்து உயிரும் விடைபெற
வெற்றுச் சாம்பலாய் காற்றில்
கரைந்தோடி முடியும்
ஆடிய - ஆட்டுவித்த உடல் ! 
Related Posts Plugin for WordPress, Blogger...