Thursday, April 30, 2015

அன்பு

கூண்டில் அடைபட்ட
சிட்டுக் குருவிகளின்
கீச்சுக் கீச்சு சப்தங்களென
மனதுக்குள் பல்வேறு
எண்ணங்களின் போராட்டங்கள் !
மனக் கூண்டை திறந்து
எண்ணங்களை பறக்க விட்டுவிட்டு
இலேசான மனத்துடன்
புன்னகை சுமந்து திரிந்திட
ஆசைதான் ! - ஆனால்
அடைபட்ட எண்ணங்கள்
ஏனோ விடுபட மறுக்கின்றனவே !
அலைமோதி  துடித்து
நெஞ்சை பிழிந்தெடுக்கும்
எண்ணங்களுக்கு வடிகால்
ஏதுமில்லையே !
எண்ணங்களை கொட்டித் தீர்க்க
அருகில் யாருமில்லை !
அருகிருப்பவர்களுக்கு ஏனோ
கேட்க மனமுமில்லை !
ஒரு சிறு வருடல் தான்
நான் உனக்கு கொடுத்தது -
வாலாட்டியபடியே என் கைகளில்
தஞ்சமானாய் ! - உந்தன்
அன்பை மழையாய் பொழிந்தாய் !
எனையே உலகமென கொண்டாடினாய் !
நீயே  நல்லுறவென
நிதர்சனமாய் நம்புகிறேன் !
தன்னலமிலா உந்தன் அன்பே
உயர்வென்று உரக்க சொல்வேன் !

http://www.vallamai.com/?p=56891

7 comments :

  1. தன்னலமில்லா அன்பிற்கு ஏது ஈடு
    அருமை
    தம 1

    ReplyDelete
  2. அருமை மிகவும் அருமை ! பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    மிகவும் பிடித்தமான் வரிகள்:

    //எண்ணங்களுக்கு வடிகால் ஏதுமில்லையே !
    எண்ணங்களை கொட்டித் தீர்க்க அருகில் யாருமில்லை !
    அருகிருப்பவர்களுக்கு ஏனோ கேட்க மனமுமில்லை !
    ஒரு சிறு வருடல் தான் நான் உனக்கு கொடுத்தது -
    வாலாட்டியபடியே என் கைகளில் தஞ்சமானாய் ! - உந்தன்
    அன்பை மழையாய் பொழிந்தாய் ! எனையே உலகமென கொண்டாடினாய் !
    நீயே நல்லுறவென நிதர்சனமாய் நம்புகிறேன் !
    தன்னலமிலா உந்தன் அன்பே உயர்வென்று உரக்க சொல்வேன் !//

    சபாஷ் ! வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. "தன்னலமிலா உந்தன் அன்பே
    உயர்வென்று உரக்க சொல்வேன்!" என்பது
    உண்மை தான்!

    ReplyDelete


  4. உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  5. அருமை. அன்பிற்கு ஈடு இணை ஏது....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...