Tuesday, March 26, 2013

கற்றுக் கொடேன் –அன்னம் விடு தூது





பிரித்தறிய முடியாத
பால் நீர்க் கலவையினின்று
நீரைப் பிரித்தெடுத்து
தூய்மையான பாலை
பருகும் அன்னப் பட்சியே
உலக    மாந்தருள்
பிரித்தறிய இயலாதவாறு
விரவிக் கிடக்கும்
நல்லவர் – தீயவர்
இனம் காண
நல்லதொரு உத்தியை
கற்றுக் கொடேன் !!!


venkatnagaraj.blogspot.com/2013/04/9.html

 

 


கவிதை எழுதியமைக்குபூங்கொத்து வழங்கி  கௌரவித்தமைக்கு திரு.வெங்கட் நாகராஜ் அவர்கட்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

4 comments :

  1. அழகிய சிந்தனை வாழ்த்துக்கள் உங்கள் எண்ணக்
    கவிதைகள் உலகை வலம் வரட்டும் .இன்று போல்
    என்றும் எம் உறவும் தமிழோடு இணைந்திருக்கட்டும் !
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. தங்களது பெயர் "அம்பாளடியாள்" மிகவும் இரசித்தேன் சகோதரி.தங்களது வருகைக்கும்,வாழ்துக்கட்கும்,கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.இனிக்கும் தமிழால் இணைந்திருக்கட்டும் நம் உறவும் என்றென்றும்.

      Delete
  2. ''..விரவிக் கிடக்கும்
    நல்லவர் – தீயவர்
    இனம் காண
    நல்லதொரு உத்தியை
    கற்றுக் கொடேன் !!!...'''
    good.
    Vetha.Elangathilakam


    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் கவிஞரே !!! தங்களின் பாராட்டுதல்களைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...