வருண தேவனின் அனுக்கிரகம் தான்
அளவில்லாமல் நிறைந்திருக்கு !!!
காலமெல்லாம் எம் வாழ்க்கையும் தான்
தண்ணீருடன் இணைந்து இருக்கு !!!
படகும் எம் வாழ்வின் ஆதாரமாக
விவசாயம் தொடங்கி வியாபாரம் வரை
அன்றாட வாழ்வும் தானிங்கு நடக்குது !!!
வீடுகளும் தான் மேடையேற
அமைதியான வாழ்வும்
நிம்மதியாய் அரங்கேறுது !!!
குழாய்களும் இங்கில்லை - குழாயடி
சண்டைகட்கு நேரமில்லை !!!
ஜாதிகள் இங்கில்லை - ஆதாய
அரசியலுக்கோர் வாய்ப்புமில்லை !!!
காரேறி வர அரசியல்வாதிக்கு
வழியும் தானில்லை !! - படகேறி வர
ஒருவரும் எத்தனிப்பதுமில்லை !!!
சாலை மறியலுமில்லை - காத்துக்
கிடக்க வைக்கும் போக்குவரத்துமில்லை !!!
ஏமாற்றும் மனமுமில்லை -
ஏற்றமான வாழ்வுக்கு குறையுமில்லை !!!
இயற்கையுடன் இயைந்த
வாழ்வும் தான்
இன்பமயமாய் நடக்குது -
இறைவனின் துணையுடன் !!!


ReplyDeleteகிரேஸ் பிரதிபா commented on your blog post வாழ்க்கை
//ஏமாற்றும் மனமுமில்லை -
ஏற்றமான வாழ்வுக்கு குறையுமில்லை !!! // அங்க ஒரு இடம் கிடைத்தால் நல்லா இருக்கும் ...அருமையான கவிதை!
ReplyDeleteDindigul Dhanabalan commented on your blog post வாழ்க்கை
இடத்தை சொல்லுங்க... நாங்களும் வந்து விடுகிறோம்...
வாழ்த்துக்கள்...