வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - சிட்டுக்குருவி தளத்தில் எழுதிவரும் திரு.விமலன் அவர்கள்
இந்த வாரம் சிட்டுக்குருவி தளத்தில் எழுதி வரும் ஐயா  திரு.விமலன் அவர்கள்  ஸ்னேகமாயும்,பூந்தூவலாயுமாய் 
 என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். 
அதில் எனது கவிதையையும் குறிப்பிட்டுள்ளார் என்பதை 
அறிந்து மகிழ்ந்தேன். 
முகிலின் பக்கங்கள் என தமிழ் முகில் பிரகாசம் அவர்களின் வலைத்தளம் 
விரிகிறது கவிட்தைகளை உள்ளடக்கி,கவிதைகள் பொதுவாக எதையும் சொல்ல வல்லவை 
என்பதை இவது எழுத்து 
மெய்ப்பித்துச்செல்வதாய்.மெய்ய்பிக்கட்டும்,மெய்ப்பியுங்கள் தமிழ்முகில் 
சார்.இதோ அவரது எழுத்திலிருந்து,,,,,,,
 எந்தன் உள்ளங்கைகளில்  அப்படியே 
முகம் புதைத்துக் கொண்டு 
என் முகம் பார்த்து நிற்பாய் !! 
தலை சாய்த்து நின்று கொண்டு 
உருளும் விழிப் பார்வையால்  
மெல்ல நீவி விடச் சொல்வாய் !!
நான் செல்லுமிடமெல்லாம் 
வாலசைத்துக் கொண்டே 
காவலாய் உடன் வருவாய் !!
 கண்டதும் சந்தோஷம்  மேலிட
தாவி வந்து மேலேறிக் கொண்டு 
நாவால் அன்பாய் வருடுவாய் !!
சில வேளைகளில் உன் 
கட்டுக்கடங்கா கள்ளமில்லா 
அன்பு - பயமுறுத்தியதும் உண்டு !! 
ஆனால் 
என்றென்றும் - உந்தன் 
கைமாறு எதிர்பாரா அன்பிற்கு 
ஈடு - இணை உலகிலேதுமில்லை !!!
                                                                         
                                                                        
         மனம் கொள்ளை  கொள்கிற இக்கவிதை  ஒரு செல்லப்பிராணியைப் பற்றி எழுதியது,படிப்போம் அனைவருமாய். 
  
எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த  திரு.விமலன் ஐயா அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள். 
இங்கனம்,
 
திருமதி.பி.தமிழ் முகில் நீலமேகம்  
 

 
வலைச்சர அறிமுகத்திற்கு நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇக் கவிதையை இன்றுதான் காணுகிறேன்.
அருமை. மிக அருமை உங்கள் படைப்பு!
வாழ்த்துக்கள் மீண்டும் தோழி!
தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
Deleteவாழ்த்துக்கள் :)
ReplyDeleteமிக்க நன்றி தோழி.
Deleteஎங்கள் வீட்டுப் பூனையை நினைவு படுத்தியது ...வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.
Deleteஅழகிய கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள்
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !!!
DeleteEniya vaalththu.
ReplyDeleteVetha.Elangthilakam.
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!
Delete