Tuesday, February 4, 2014

சுமப்பதெல்லாம் சுமையல்ல !!!



பட்டுப் பாதம் அது
சுடும் நெருப்புல தான்
பொத்துப் போயிடுமோ
இல்ல -
கொத்து  நெருஞ்சியும் தான்
பஞ்சு பாதத்தையே
பதம் பாத்துருமோ
இல்ல -
நடந்து நடந்து உன்
குட்டிக் காலுந்தான்
நோவெடுத்துப்  போகுமோ
இதையெல்லாம் நினைச்சாலே
மனசு பதைக்குது - என்
தங்கச்சி தங்கமே !
நானே உன்ன சுமக்கறேன்
என் முதுகுல உப்பு மூட்டையா !
சுமக்கிறதெல்லாம் சுமை
ஆயிடாதடி செல்ல தங்கமே
சுகமா நீயும் உக்காந்திரு
அண்ணன் உன்னை
விரசா  கூட்டிப் போறேன்
என் குட்டித் தங்கமே !!!


18 comments :

  1. ஆனந்த சுமை ஆயுளும் நீடிக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா....

      Delete
  2. அழகான அருமையான... பொறுப்பான வரிகளை ரசித்தேன்... பாராட்டுக்கள்...

    இது என்றும் தொடரவும் வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நன்றிகள் ஐயா...

      Delete
  3. அருமையான அண்ணன்....

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  4. ஆனந்தக் கண்ணீர் வந்தது...அருமை தோழி!
    த.ம.3

    ReplyDelete
  5. பாசமலர் சிவாஜியும் சாவித்ரியும் இந்த அழகான கவிதையில் குழந்தைகளாக ... ;)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா !! மிக்க நன்றி ஐயா.

      Delete
  6. பாசம் ததும்பும் கவிதை..... படத்திற்கு மிகப் பொருத்தமாய்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே !!!

      Delete
  7. ''...சுமக்கிறதெல்லாம் சுமை
    ஆயிடாதடி செல்ல தங்கமே
    சுகமா நீயும் உக்காந்திரு...'''
    பாசம்...பாசம்!
    நேசம்...நேசம்!
    இனிமை...இனிமை....!!!!
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!

    ReplyDelete
  9. கனமற்ற குட்டித்தங்கம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !!!

      Delete
  10. பாடல் தாலாட்டு போலவே உள்ளது...

    அழகு...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...