செந்நிறப் புரவியது
சிறகு விரித்து
பறந்து வர
நடு நாயகமாய்
கதிரோனும் அதிலேறி
பவனி வர
சமுத்திரம் தன்
அலை கரம் அசைத்து
நடனமாடி வரவேற்க
வானும் தன் பங்கிற்கு
அழகினை வாரி இறைக்க
நீலம் சுமந்த கடலும்
மணல் கொண்ட கரையும்
கைகோர்த்து மகிழ்ந்தாட
கலைக் கண்களுக்கு
இவையனைத்தும் விருந்தாக -
இயற்கையின் எழிலான
அரங்கேற்றம் !
 

 
இயற்கைக் காட்சியும்
ReplyDeleteஅது தந்த கவிதையும் அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றிகள் ஐயா.
Deletetha.ma 1
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteஆகா...! ரசித்தேன்...
ReplyDeleteஅரங்கேற்றம் மிக அருமை. படமும் ஆக்கமும் மனதுக்கு மகிழ்வளித்தன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றிகள் பல ஐயா.
Delete