Wednesday, November 30, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-1(மாடு,கிளி,பெட்டி )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் - மாடு, பெட்டி, கிளி


மாடு போல் உழைத்து
செல்வத்தை தன்
இரும்புப் பெட்டியிலும்
அன்பினை தன்
இதயப் பெட்டியிலும்
வைத்துப் பாதுகாத்தார்
தந்தை - தான்
கிளியென வளர்த்த
தன் மகளுக்காக!!!

http://www.eegarai.net/t75698-topic#684164 

கடற்கரையில் ஒரு கோடை மாலை


யாரப்பா அங்கே.....
சூரிய தேவனவன்
ஓய்வெடுக்கச் செல்கிறான்....
வழியனுப்ப வாருங்களேன்...
நாள் முழுதும் அயராது
தன் ஒளிக் கதிர்களால்
சுட்டெரிக்கும் பணியைச்
செவ்வனே செய்து முடித்து
அயர்ந்து போய் -
தன் சூட்டையெல்லாம்
ஆழியினுள் அழுத்தி
ஆழி நீரையும்
அகன்ற வானமதையும்
செம்மையாக்கி விட்டு
நித்திரைக்குள் மூழ்குகிறான்
சூரிய தேவனவன்.........
வாருங்கள் - வரவேற்கத்
தயாராவோம்.....தன்மையை
தன்னகத்தே கொண்ட
சந்திர  தேவனை !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=73

தண்ணீர்.


காற்றது இட்டுச் செல்ல
மேகப் பெண்ணவள்
காற்றின் இசைக்கேற்ப
நடனமாடுகிறாளோ???
அந்த நாட்டிய அரங்கத்தில்
நீர்த் தோழியும்
மேக மங்கைக்கு துணையாய்
கைகோர்க்கிறாள்!!!
அற்புத நாட்டியத்தைக்
கண்டு கழிக்க அங்கே
வந்து விட்டான்-
வருண தேவனும்!!!
அண்ணலது வரவால்
குளிர்ந்தது - நானிலமெங்கும்!!!
நிறைந்தது - வாழ்வும் வளமும்!!!

Sunday, November 27, 2011

மலையளவு நம்பிக்கை

உலகின் உயரமான மலையிலிருந்து
வந்தேன்-உலகின் குள்ளமான மனிதன்
எங்கள் நேபாளத்தின் அரசுத் தூதுவனாய்.....
உயரம் குறைவாய் இருப்பதாய்
என்றும் நெஞ்சில் குறையிருந்ததில்லை....
உள்ளத்தில் இருக்கிறது நம்பிக்கை-
எங்கள் தேசத்தின் உயரமான மலையளவு!!!

http://www.eegarai.net/t72755p180-topic#682103

குதிகால் செருப்பழகி


அடி குதிகால் செருப்பழகியே....
உன் வீட்டில் என்ன
தஞ்சம் தாண்டவமாடுகிறதோ?
அரை ஜான் உயரமான
நான் கூட -  உச்சி முதல்
பாதம் வரை
ஆடை அணிந்திருக்க....
ஆறடி உயரமான உனக்கு
உன் முழங்கால் மறைக்க
ஆடை கிடைக்கவில்லையோ??

http://www.eegarai.net/t72755p180-topic#682101


Sunday, November 20, 2011

விதையிலிருந்து......


விதையாய் பூமிதனில்
விழுந்து-மண்ணை தன்
வேர்களால் இறுகப் பற்றி
நிமிர்ந்து நின்று.....
ஆதவனின் ஒளி கண்டு
முகம் மலர்ந்து.....
காற்றின் இசைக்கேற்ப
தலையசைத்து .......
பருவத்தே பயனளித்து
தன் கடனாற்றும்
உன்னதப் பிறவிகள் - தாவரங்கள்!!!
http://pullaankulal.blogspot.com/2011/11/5.html#comment-form

மழைத் தாய்க்கு ஓர் நாட்டியாஞ்சலி வரவேற்பு!!!


மழைக்கு கறுப்புக்
குடைதனை
கொடியாகக்  காட்டி
புறக்கணிப்போர் மத்தியிலே
இங்கே நடக்கிறது-
மழைத்  தாய்க்கு ....
நாட்டியாஞ்சலி வரவேற்பு!!!
மனம் குளிர்ந்த அன்னையவள்
வந்து விட்டாள்......
தன் பூமிக் கிள்ளையைத் தேடி!!!
மகிழ்ந்திருப்போம்-
அன்னையின் தன்மையில் ........
என்றும் மறவாதிருப்போம்-
மழை தரும் மரங்களை
வளர்க்க வேண்டுமென்பதை !!!
http://pullaankulal.blogspot.com/2011/11/6.html#comment-form


Related Posts Plugin for WordPress, Blogger...