Monday, April 1, 2013

ஏங்க வைத்த பொற்காலம்


பள்ளிக்கூடம் முடிந்து  தான்
வீடு திரும்பும் போதிலே
வழிநெடுகிலும் விளையாட்டும்
ஆட்டமும் என ஆடியதொரு காலம் !!!


புளியம்பழமும் கொடிக்காயும்
வாயெல்லாம் அடக்கிக்
கொண்டது போக - பைகளையும்
நிரப்பி மகிழ்ந்தது ஒரு காலம் !!!

விடுமுறை நாட்களில் பட்டமும்
அம்மா சுட்டுத் தந்த பலகாரத்தையும்
சைக்கிளில்  சுற்றி அலைந்து
வியாபாரம் பார்த்ததொரு காலம் !!!

ஆசிரியரிடம் பெற்ற
சிறுசிறு பரிசும்  பொக்கிஷமாய்
பாதுகாத்து - பார்த்துப் பார்த்து
 மகிழ்ந்ததொரு காலம் !!!

நண்பர்களுடன் சேர்ந்து
போட்டிபோட்டு சைக்கிள் கற்று
 தாயை அமரவைத்து  - பெருமையுடன்
தெருவில் உலா வந்ததொரு காலம் !!!

அண்ணன்களும் அக்காக்களும்
தங்கமென தாங்க - வீட்டிற்கே
இராசாவாய் அதிகாரமாய்
கோலோச்சியது ஒரு காலம் !!!

தன்னிகரில்லா தியாகத்தின்
ஆசி பெற்று- கல்வியில்
அறிவுரை பெற்று  - வாழ்வில்
பெருமை சுமந்ததொரு காலம் !!!

நல் நட்புகளின் துணை கொண்டு
உலகியலை கற்றுத் தெளிந்து
பயம் சிறிதுமறியாது - சவால்களை
எதிர் கொண்டதொரு காலம் !!!

இல்லையென்ற சொல்லும்
அறிந்திருக்கவில்லை !!!
தேவைக்கு அதிகமாய் பெற்று
வீணடித்ததுமில்லை !!!

வாழ்வின் இளமைக் காலம்
என்றென்றும் நினைவலைகளில்
நீங்கா வண்ணம் நிறைந்து -
ஏங்க வைத்த பொற்காலம் !!!



No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...