Wednesday, April 17, 2013

கிள்ளையே !!!




உன் சிப்பி வாயினுள்
முத்துப் பரல்களென
வெண்பற்கள் – உன்
அழகுச் சிரிப்பிற்கு
அழகூட்டுகின்றனவே !!!
அமுத சுரபியென
உன் செவ்வாய் -
உமிழ்நீருடன் சேர்த்துதிர்க்கும்
அமுதச் சொற்களுக்கு
உருவாக்கிடலாம் -
ஓர் பேரகராதி !!!
நிற்கவும் நடக்கவும்
எத்தனித்து – நீ
வைக்கும் ஒவ்வோர்
அடியின் அசைவிற்கும்
இணையானதோர் –
எழில் நடனம்
உலகெங்கிலும் இல்லை !!!
வட்டிலில் இட்ட
உணவதனில் – நீ
வரையும் கோலம் போன்றதொரு
எழிலோவியம் வரைய
ஓவியரெவரும் பிறக்கவில்லை !!!
சிறு கிள்ளை உன்
அசைவு ஒவ்வொன்றும்
தவமிருந்து காத்திருந்த
அன்னை  மனதை
கொள்ளை கொண்டிடுமே  !!!
அவளெடுத்த பிறவியின்
பயனும் தான் – இனிதே
நிறைவேறுமே ! – இன்பங்கள்
அனைத்தும் தேடி அடைந்திடுமே
அவள் காலடியில் தஞ்சம் !!!

6 comments :

  1. Replies
    1. மனமார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  2. அழகிய வரிகள். அருமையான படமும்.
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...