இருளுக்கு விடைகொடுத்து
அனுப்பிவிட்டு - ஒளி சிந்தும்
இரவிக்கு வரவேற்பளிக்க
தயாராக்கிக் கொண்டிருக்கும்
வைகறைப் பொழுது !!!
இரவெல்லாம் சற்று
இளைப்பாற புல்லின்
மடி தேடி ஓடி வந்த
வெண்பனிக் கூட்டமும்
மெல்ல மெல்ல
துயில் கலைந்து செல்ல
அசதியில் சற்று கண்
அசந்து போன பனித்துளிகளை
புல்லின் நுனிதனில் இருந்து
எழுப்பிட வந்து கொண்டிருக்கிறான்
கதிர்க்கர இரவியும் !!!
புள்ளினங்களும் தம்
இன்னிசையால் பள்ளியெழுச்சி
இசைக்க -உலகிற்கு
உயிர்வளி வழங்கும்
உன்னத கர்ணப் பிரபுக்களாம்
மரங்களும் - தம் கடமையை
சீரிய முறையில் - அந்த
அதிகாலை தொட்டே
செயலாற்றத் துவங்க
இன்ப மயமாய் துவங்கியது
அந்த வைகறைப் பொழுது !!!
ReplyDeleteDindigul Dhanabalan commented on your blog post
அழகான இனிமையான கவி வரிகள்.... (படமும்)
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
வைகறைப் பொழுது !!!
superda
ReplyDeleteThank you Anna..
Delete