Wednesday, December 11, 2013

வருவீரோ பாரதியே ?




பாட்டுக்கோர் புலவனவன்
எம் பாக்களுக்கெலாம்
புது வடிவுடன் புத்துயிர் அளித்து
எம்மை வழிநடத்தும் 
தேவ மகன் அவர்  !!!

அடிமை விலங்கும்தான் உடைய
விடுதலை வேள்வித்தீ தனையும்
மாந்தர் உள்ளமதில் தான்
பொறி பறக்கும் பாடல்களால்
பற்றி எரியச் செய்தாரே  !!!

காக்கை குருவியுடனும்
உறவாடக் கற்பித்தார் -
பூனைக் குட்டிகளின் வாயிலாக
வேற்றுமையில் ஒற்றுமையதை
அழகாய் உணர்த்தினாரே !!!


துணிச்சல் நிறைந்த
தூயவரே ! - நீண்ட
துயில் கலைந்து வாரீரோ ? - உம்
சாட்டையடிப் பாடல்களினால்
சமூகம் சீர்திருத்த வாரீரோ ?

காத்திருக்கிறோம் உமக்காய்
கடிது வந்திடுவீர் பாவலரே
கண்ணான தேசம் காத்திட
களையெடுக்க வாரீரே -
முண்டாசுக்  கவிஞரே !!!


8 comments :

  1. வணக்கம்

    பாரதி பற்றிய கவிதை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்... மீண்டும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி வாருங்கள் எழுதுங்கள்.... விபரம் பார்வையிட
    இதோ முகவரி.http://2008rupan.wordpress.com.
    http://tamilkkavitaikalcom.blogspot.com எனது புதிய வலைத்தளம் ஊடாக கருத்து இடுகிறேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே !!!

      போட்டி அறிவிப்பைக் கண்டேன். கலந்து கொள்கிறேன்.

      தங்களது புதிய தளத்திலும் இணைந்து கொண்டேன்.

      நன்றி.

      Delete
  2. எட்டையபுரக் கவிஞனுக்கு
    எடுப்பான பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் கொடுத்தீர்கள்.
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துக்கு நன்றிகள் ஐயா.

      Delete
  3. பாடல் மிகவும் அருமை... சிறப்பிற்கு பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  4. சிறப்பான வரிகளுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் .

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...