உள்ளத்தாலும் உணர்வினாலும்
உன்னில் என்னைக் கண்டே
என்னில் உன்னை நிறைத்தே
நாளெலாம் கடக்கிறேன் !
காலத்திற்கும் சிநேகிதியாய்
கதைகள் பேசி இலயித்திருக்க
ஏற்றம் தாழ்வு எதுவரினும்
தோள்
கொடுக்கும் தோழியாய்
கண்மணி உனக்கு
நானிருப்பேன்
எந்தன் மடியில் முகிழ்த்த நல்முத்தே !
இக்கவிதை அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாசிக்கப்பட்டது.
வாசிக்கப்பட்ட கவிதைகள் அனைத்தும், youtube வீடியோவாக உள்ளது.
https://youtu.be/2Shsuo1NxyI
நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்
திராவிட வாசகர் வட்டம் நடத்தும், பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020 க்கு நான் எழுதிய 5 சிறுகதைகள்.அமேசான் கிண்டிலில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். Kindle Unlimited வைத்திருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்விரு நூல்களும் இப்போது, free promotion ல் உள்ளது. நண்பர்கள் வாசித்து, review எழுதினால், போட்டியின் அடுத்த நிலைக்கு செல்ல உதவியாக இருக்கும். போட்டியின் அடுத்த நிலைக்கு செல்ல 10 review க்கள் தேவைப்படுகிறது. இயன்ற நண்பர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
https://www.amazon.in/dp/B08721CK7J/ - பென்குவினின் கதை
https://www.amazon.in/dp/B085DNRVZX/ - பிளாஸ்டிக்கில் இருந்து விடுபடுவது எப்படி?https://www.amazon.in/dp/B085VK46SX/
பூச்சிகளும் பூச்சிகளை உண்ணும் செடிகளும்
அனைத்து நூல்களையும் Kindle unlimited வைத்திருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்களும், amazon reviews ம், புத்தகம் முதற்கட்டத் தேர்வில் இடம்பெற உதவும்.
உதவும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.



